திருவள்ளூர்-அமலாக்கத்துறை  கண்காணிப்பில்…நீர்வளத்துறை உயரதிகாரிகள்?

திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தில் திருவள்ளூர் தலைமையகமாகக் கொண்டு செயற்பொறியாளர் கட்டுப்பாட்டில் மூன்று உப கோட்டங்கள் செயல்படுகின்றது சென்னை உப கோட்டம் திருவள்ளூர் உபகோட்டம் திருத்தணி நந்தியாறு உபகோட்டம் மூன்று கோட்டங்களாக செயல்பட்டு வருகின்றது.

கடந்த இரண்டு வருடங்களாக செயற்பொறியாளராக அருள்மொழி பதவி வகிக்கின்றார் இவர் பதவியேற்றதிலிருந்து திருவள்ளூர் தலைமையகத்துக்கு வருவதே இல்லை இவர் அமைச்சர் துரைமுருகனின் நிழலாக சென்னை தலைமையகத்தில் வளம் வந்து கொண்டிருக்கின்றார் இவர் சென்னை உபகோட்டம் அடையாறு செம்பரம்பாக்கம் புழல் ஆகிய பகுதிகளில் உள்ளடக்கிய சென்னை உபகோட்டத்தில் நிரந்தரமாக செயல்பட்டு வருகின்றார் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்திற்கு வருகின்ற கோப்புகள் அனைத்தும் சென்னை உபகோட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது சென்னை உப கோட்டம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலைமையிடமாக மறைமுகமாக இன்று வரை செயல்பட்டு வருகின்றது திருத்தணி நந்தியாறு  உபகோட்ட பணிகள் பற்றி கண்டு கொள்வதும் இல்லை கவலைப்படுவதும் இல்லை.

இதே போன்று தான் திருவள்ளூர் உப கோட்டத்தில் உள்ள பூண்டி நீர் தேக்கத்தில் கூவம் ஆறு வரவு கால்வாய்கள் வடிகால் கால்வாய்கள் பராமரிப்பு பணிகள் குறித்து எவ்வித நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை இவர் வருடம் தோறும் கோட்ட அலுவலகத்திற்கு  பராமரிப்பு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 கோடி முதல் 8 கோடி வரை மூன்று  உபகோட்டங்களுக்கு பராமரிப்பு பணிகள் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்வதற்காக நீர்வளத்துறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது அமைச்சரின் நிழலாகவும் சர்வ வல்லமை படைத்த செயற்பொறியாளர் அருள்மொழி அனைத்து நிதியுமே சென்னை உபகோட்டம் அடையாறு செம்பரம்பாக்கம் புழல் பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மற்ற உப கோட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் பணிகள் செய்ததாக பணிகள் செய்யாமலேயே எம் புக்கு பதிவு செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றது.

  திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து அமைச்சர் துரைமுருகனின் நிழலாகவும் வேண்டியவராகவும் செயல்பட்ட பொதுப்பணி திலகம் புழல் உதவி பொறியாளர் சதீஷ் கூட்டணி அமைத்துக் கொண்டு வருடம் தோறும் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்தது போன்று தற்போது அதேபோன்று நிழல் அமைச்சராக செயல்பட்டு வரும் திருவள்ளூர் செயற்பொறியாளர் அருள்மொழி செயல்பட்டு வருகின்றார்.

திருவள்ளூர் உட்கோட்டத்திற்கும் திருத்தணி உட்கோட்டத்திற்கும்  தல 50 லட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்து விட்டு 5 கோடி நிதியை செம்பரம்பாக்கத்திலும் அடையாரிலும் நிதியை கரைத்தது ஏன் ? என்ற மர்மம் செயற்பொறியாளர் அருள் மொழிக்கே  வெளிச்சம் .

அதிமுக ஆட்சி காலத்தில் நீர்வளத் துறையில் சர்வ வல்லமை படைத்தவராக பொதுப்பணி திலகம் உதவி பொறியாளர் சதீஷ் கூட்டணி அமைத்து புழல் அடையாறு செம்பரம்பாக்கம் பகுதிகளில் பணிகள் செய்யாமலேயே பணிகள் செய்ததாக எம் புக் பதிவு செய்து கோடிக்கணக்கில் கொள்ளை அடித்ததை அப்போது ஆட்சியாளர்கள் சிண்டிகேட் அமைத்து பங்கு போட்டுக் கொண்டு ஊழலையும் கொள்ளையும் மறைத்தனர் அதேபோன்று ஆட்சி மாறிய பிறகு பொதுப்பணி திலகம் துரைமுருகனின் கை பாவையாக செயல்பட்டதால் தொடர்கதையாக லஞ்ச லாவண்யம் அதிமுக ஆட்சி காலத்தைப் போன்று விடியல் ஆட்சியில் கொடி கட்டி பறந்தனர்.

இவர்கள் சவுடு மண் மணல்  கொள்ளையில் திருச்சி திருவள்ளூர் மாவட்டம் அமலாக்கத்துறை விசாரணையில் முக்கிய குற்றவாளியாக பொதுப்பணி திலகம் சேர்க்கப்பட்டு வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டு தற்போது வரை விசாரணையில் இருந்து வருகிறார் மீண்டும் அமலாக்கத்துறை திருவள்ளூர் மாவட்ட செயற்பொறியாளர் அருள்மொழி மீது தீவிர கண்காணிப்பில் அமலாக்கத்துறை இருந்து வருகிறது கடந்த நான்கு வருடங்களாக திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை யாறு வடிநில கோட்டம் உட்பட மூன்று உப கோட்டங்களிலும் தீவிர விசாரணை நடத்தினால் கோடிக்கணக்கில் ஊழல்களும் முறைகேடுகளும் ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வரும் 50 கோடிக்கும் மேல் பராமரிப்பு பணிக்காகவும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் பணிகள் நடைபெற்றதாக பணிகள் நடைபெறாமலேயே போலி எம் புக்குகளை உருவாக்கியது குறித்து மாநில நீர்வளத் துறையில் உயர் அதிகாரிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் தீவிர விசாரணை நடத்தினால் மிகப்பெரிய முறைகேடுகள் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரும்.

இதேபோன்றுதான் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை பணிகள் விரிவாக்கத்திற்காக ஏரிகளில் மண் எடுப்பதற்கு அனுமதி கொடுப்பதற்கு தனியார் நிறுவனங்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு ஏரிகள் அனைத்தும் சூறையாடப்பட்டு கரைகள் உடைக்கப்பட்டு நிர்மூலம் ஆக்கப்பட்டுள்ளது ஏரிகளை இதுவரை நீர்வளத்துறை அதிகாரிகளும் உயர் அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்ளவில்லை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துவிட்டு இலட்சக்கணக்கான கனமீட்டர் மண் எடுத்து மண் கொள்ளை அடிப்பதற்கு  நீர்வளத் துறை அதிகாரிகளே தனியார் நிறுவனங்களிடம் கூட்டணி அமைத்துக் கொண்டு கொள்ளை அடித்தது குறித்து இன்று வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை ஆய்வு மேற்கொள்ளவில்லை இதனால் அரசிற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் பல கோடி கனிம வளங்கள் கொள்ளை போவதற்கு  முழு பொறுப்பு செயற்பொறியாளர் அருள் மொழியினுடைய நிர்வாக சீர்கேடு தான் காரணமாக உள்ளது திருவள்ளூர் மாவட்டத்தில் விலை நிலங்கள் விலை நிலங்களாக மாற்றுவதற்கு கோடிக்கணக்கில் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விலை பேசி தடையில்லா சான்று வழங்குவதற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் அனைத்து முறைகேடுகளும் சட்டவிரோத செயல்களும் அரங்கேற்றம் செய்தனர்.

ஏரிகள் நிறைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளே காணவில்லை முற்றிலும் அழிந்து விவசாயிகளே ஏரிகள் காணவில்லை கரைகள் காணவில்லை மதகு கால்வாய்கள் காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் நீர்வளத்துறையிடமும் மாவட்ட ஆட்சியரிடமும்  விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையிட்டு வருகின்றனர் நடவடிக்கை தான் இல்லை அமைச்சரின் நிழலாக செயல்பட்டு வரும் சென்னை உபகோட்ட செயற்பொறியாளராக செயல்பட்டு வரும் அருள் மொழி எப்போது திருவள்ளூர் மாவட்ட கொசுஸ்தலையாறு வடிநில கோட்ட அலுவலகத்திற்கு செயற்பொறியாளராக எப்போது செயல்படுவார் என்பதை அமைச்சர் துரைமுருகன் புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும் கண்காணிப்பு பொறியாளர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் இவர்களுக்கே வெளிச்சம் 

ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் நீர்வளத்துறையில் அமலாக்கத்துறை பிடியில் சிக்கி விசாரணைகள் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை திருவள்ளூர் மாவட்ட நீர்வளத்துறை அலுவலகத்தின் மீது தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது

– கே.ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *