தவெக கட்சி நிலவரம்? காலத்தில் கொடுமை … பலூன் விட்ட கதையெல்லாம் , பொதுக்குழுவில் சப்ஜெக்ட் ஆனது….!?

விஜய் கட்சி தொடங்கி விட்டார் இனிமேல் தமிழகத்தில் யாரும் தலைகாட்ட முடியாது. விஜய் சொன்னது தான் சட்டம். விஜய் எங்கே கையை காட்டுகிறாரோ அங்கேயே போய் நாங்கள் நிற்போம். இது ஏதோ பஞ்ச் டயலாக் பேசுகிற சினிமா வசனம் அல்ல. தமிழ்நாடு அரசியல், மக்களின் வாழ்நிலை, எல்லாம் புரிந்து கொண்டு தான் விஜய் செயல்படுகிறாரா என்று தெரியவில்லை. ஏதோ நீதி கட்சியின் பாரம்பரியத்தில் இருந்து வந்தது போல,பொதுவுடைமை இயக்க தோழர் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தது போல, பகுத்தறிவு அரசியல் பின்னணி கொண்டவரை போல விஜய் கட்சியின் புஸ்சி ஆனந்தை  பொதுச் செயலாளர் ஆக்கட்டும் அது அவர் கட்சி அதில் யாரும் தலையிடவில்லை. 

உலக நாட்டிலே பொதுக்குழு கூட்டத்தை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்த ஒரே கட்சி விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தான்.

பொதுக்குழு என்றால் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசுவது. கட்சியை வழிநடத்த தேவையான ஆரோக்கிய விவாதங்களை செய்வது,எதிர்க்கட்சிகளின் சவாலை எப்படி சமாளிப்பது என்ற விவாதங்கள். இப்படித்தான் நடக்கும் நடப்பதற்கு கேள்விப்பட்டிருக்கிறோம் பொதுக்குழு செயற்குழு என்பது அந்த கட்சியின் ரகசியம் காக்க அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு என்னதான் வெளிப்படையாக இருக்கிறோம் என்று சொன்னாலும் கூட சில கருத்துக்களை நான்கு சுவற்றுக்குள் தான் பேசி முடிவெடுக்க வேண்டும். அதில் உள்ள சாதக, பாதகங்களை அறிந்து ஒரு நல்ல முடிவை வெளியிடுவது அரசியல் கட்சிக்கு அழகு.

அதை விடுத்து பொதுக்குழுவில் விவாதிக்கப்படுகிற பேசப்படுகிற எதுவும் நடக்கவில்லை. விஜய் தமிழக வெற்றிக் கழகத்தில் அது வேறு அதைக் கூட நேரடி ஒளிபரப்பு செய்வது ஏதோ சொல்லுவார்கள்

அது போல இருக்கிறது அதுவும் அந்த பொதுக்குழுவில் ஒரு மாவட்ட செயலாளரை பற்றி ஆனந்த் பேசிய பலூன் கதை மிகக் கேவலமானது. ஒரு பலூன் பறக்க விட்டால் அதை அனுமதியில்லாமல் பறக்க விட்டதற்காக காவல்துறை பறித்து சென்றிருக்கிறது. அதை மீட்க வேண்டிய நடவடிக்கைகளை அந்த மாவட்ட செயலாளர்தான் செய்ய வேண்டும். அந்த பலூனை கூட மீட்க முடியாத ஒரு மாவட்ட செயலாளர் மக்களை எப்படி மீட்பார் என்பதில் எல்லோருக்கும் இருக்கிற போல நமக்கும் சந்தேகம் இருக்கிறது. அதை மீட்டுக் கொடுக்க சொல்லி பொதுச் செயலாளரிடம் கேட்டு அது ஒரு கதை என பொதுகுழுவில் பேசி இருப்பது உங்களின் அரசியல் ஆளுமை என்ன என்பதை வெட்ட வெளிச்சமாக பொதுமக்களுக்கு போட்டு காட்டி இருப்பது உண்மை. எல்லாம் மக்கள் கவனிப்பார்களா என்று நீங்கள் என்னலாம். இது எல்லாம் மக்கள் கவனிப்பார்கள் என்பதுதான் அரசியல்.

ஏதோ பொதுக்குழுவில் பேசு என்றால் பிரியாணி கதை, பலூன் கதை, பாம்பு கதை,ஓநாய் கதை, நரி கதை எல்லாம் சொல்வதற்கு இது ஒன்றும் சினிமா கதை ஆலோசனை இடமல்ல. 

நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கக் கூடாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்காக பாம்பு கதை தேள் கதையா சொல்ல முடியும் 

2006 தேர்தலில் புதுச்சேரியில் புஸ்சி தொகுதியில் ஆனந்த் வாங்கிய வாக்கு எவ்வளவு தெரியுமா 2,423 அந்த தொகுதியில் மொத்த வாக்கு எவ்வளவு தெரியுமா 
5,627.

ஆனந்த் புதுச்சேரி காங்கிரசு அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான அஷ்ரபின் உதவியாளராகவும் இருந்தவர். ஆனந்த் முதலில் புதுச்சேரி மாநில விஜய் இரசிகர் மன்ற கௌரவத் தலைவராக இருந்து, பிறகு தலைவராக மாறினார். 

2006 ஆம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் புஸ்சி சட்டமன்றத் தொகுதியில், புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார் இதன் பிறகு, ஆனந்த் அகில இந்திய விஜய் இரசிகர் மன்றப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அரசியலில் ஒரு அடி கூட எடுத்து வைக்காமல் ஒரு கட்சியின் பொது செயலாளராகி பலூன் கதையை சொன்ன முதல் பொதுச் செயலாளர் ஆனந்த் தான்.

இப்படியே அந்த கட்சி தொடர்ந்து பயணித்தால் 2026 தேர்தலில் மக்கள் வேறொரு கதை சொல்ல வேண்டி இருக்கும். இது எப்படியோ 2026 தேர்தலில் விஜய் கட்சி வேட்பாளர்கள் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியில் விலை போவது உறுதி. இனிமேலாவது ஆனந்த் போன்றவர்கள் பலூன் கதை சொல்வதை நிறுத்திக் கொண்டு ஆரோக்கியமான அரசியலை பேசட்டும். 

– பா. ஜோதி நரசிம்மன்