மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பகுதியில் காவல் நிலையம் அருகில் பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக மது விற்கும் அவலம் அரங்கேறி வருகிறது. மது விற்பனை காவல் துறையினருக்கு தெரிந்தே, நடைபெறுகிறதா அல்லது டாஸ்மாக் பணியாளர்கள் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்களை கள்ளத்தனமாக விற்கிறார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் கீழப்பட்டி ரோட்டில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் விக்கிரமங்கலம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகிலேயே பெட்டிக்கடையில் வைத்து கள்ளத்தனமாக மது விற்பனை ஜருராக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இதன் அருகிலேயே விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். விக்கிரமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பேருந்து நிலையத்தில் இறங்கி பள்ளிக்கு செல்லும் வழியிலேயே இந்த பெட்டிக்கடையும் உள்ளது என,
வேதனை தெரிவிக்கின்றனர்
பகல் 12 மணிக்கு டாஸ்மாக் திறக்கும் நிலையில், அதிகாலை முதல் பெட்டிக்கடையில் வைத்து கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவது இங்குள்ள காவல் துறையினருக்கு தெரிந்தே விற்கப்படுகிறதா, அல்லது அருகில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு டாஸ்மாக்கில் பணிபுரியும் பணியாளர்கள் மதுபானங்களை மொத்தமாக பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்கிறார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மாவட்ட நிர்வாகம், விக்கிரமங்கலம் பகுதியில் ஆய்வு செய்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
– நா.ரவிச்சந்திரன்