மூன்றாவது முறையும் எனக்குத்தான் எம்எல்ஏ சீட்டு என்று சொல்லிக்கொண்டு நம்பிக்கையோடு வலம் வருகிறார் திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பி!
பெயர்தான் நல்லதம்பியே தவிர அவர் கெட்டதம்பியாகி பல வருடங்கள் ஆச்சி என்கிறார்கள் திருப்பத்தூர் நகர திமுகவினர்! தொகுதி மக்களுக்கு கெடுதல் செய்யாத எம்எல்ஏ நல்லதம்பி என்று சொல்லலாம் தேர்தல் வாக்குறுதிகளை மறந்துவிட்டு, தான் உண்டு தன்னுடைய கமிஷன் கலெக்ஷன் வாழ்க்கை உண்டு என்று தூங்காத நேரம் போக மற்ற நேரங்களில் சம்பாதிப்பதிலேயே பிஸியாக இருக்கிறார். தொகுதிக்குள் திமுக நிர்வாகிகள் பெரும்பான்மையானவர்கள் நல்லதம்பி மீது அதிருப்தி மனநிலையில் இருக்கின்றனர். அதைப்பற்றி நல்லதம்பியும் கவலைப்படல மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவும் கவலைப்பட்ட மாதிரி தெரியல, அமைச்சரை அப்பா என்று கூப்பிடுகிறார். அப்பா சொல்லிட்டார் அப்பாகிட்ட சொல்லிட்டேன் என்று சொல்லியே திமுக நிர்வாகிகளையும் அதிகாரிகளையும் மிரள வைக்கிறார் இதனால் தொகுதிக்குள் அதிருப்தி சதவிகிதம் கூடிக்கொண்டே இருக்கிறது.
ரெய்டு பண்ண தகுதி உள்ள அனைத்து துறைகளும் தாராளமாய் யோசிக்காமல் ரெய்டு பண்ணலாம் அதற்கு முழு தகுதி உள்ளவர் நல்லதம்பி எம்எல்ஏ! இதுக்கு மேல பென், உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லப்போகுதோ தெரியல…
முப்பது வருஷத்துக்கு மேல நகர செயலாளரா இருக்கேன் மக்கள் பிரதிநிதியாக எனக்கு வாய்ப்பு கிடைக்கல என்று குமுறிக்கொண்டு இருக்கும் வழக்கறிஞர் இராஜேந்திரன் இந்தமுறை விடறதில்லை என்று உறுமுகிறார் திருப்பத்தூர் நகரில் இன்றுவரை இராஜேந்தினை தாண்டி திமுகவில் அரசியல் பண்ணமுடியவில்லை சமீபகாலமாக, நல்லதம்பி எம்எல்ஏ இராஜேந்திரனை அழைத்துக்கொண்டு போகிறார் ஆனால் இராஜேந்திரன் எனக்குத்தான் இந்தமுறை எம்எல்ஏ சீட்டு என்று சிரிக்கிறார்.
திருப்பத்தூர் நகரமன்ற துணைத் தலைவராக இருக்கும் ஷபியுல்லா ஏன் நான் கேட்க கூடாதா? நானும் எம்எல்ஏ சீட் கேட்க பணம் கட்டுவேன் கேட்பது என் உரிமை கொடுப்பதும் கொடுக்காததும் தலைமை விருப்பம் என்று தன் சகாக்களிடம் சிசுகிசுக்கிறார். கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் உட்பட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் எம்எல்ஏ சீட்டு கேட்டு பணம் கட்ட தயாரகிகிட்டு இருக்காங்க மண்டல செயலாளர் அமைச்சர் எ.வ.வேலுவும், மாவட்டச் செயலாளர் தேவராஜும் அமைதியா பார்த்துகிட்டு இருக்காங்க, ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிக்குழு தலைவர்கள் யாருக்கும் திமுகவினர் மத்தியில் நல்ல பெயர் இல்லை சுருக்கமா சொல்லனும்னா ஒன்றியங்களில் திமுக டல்லடிக்குது எம்எல்ஏ சீட்டுக்கு தகுதியானவர்கள் இவர்கள்தான்… அவர்களா… என்று விசாரித்து தேர்வு செய்வது அறிவாலயத்தின் கையில்!
நம்முடைய பார்வையில் நல்லதம்பியா… வழக்கறிஞர் ராஜேந்திரனா… என்பதுதான்.
இ.பட்டத்து இளவரசி
திருப்பத்தூர் தொகுதி – திமுக இவர்கள் … அவர்களா …
