முடிவுக்கு வந்தது தந்தை மகன் மோதல்அதிமுக – பாஜக கூட்டணிக்கு தயாராகிய ராமதாஸ்.!

கடந்த இரண்டு மாதங்களாகவே பாமகவில் உட்கட்சி  மோதல் தொடங்கியது சென்னையை அடுத்த மஹாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டிற்கு பிறகு பாமகவில்  தந்தை மகன் மோதல் தொடங்கியது. இருவரும் தனித்தனியாக பிரிந்து பனையூரிலும் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்திலும் கட்சி நிர்வாகிகளை சந்தித்தும் நீக்கியும் முடிவுகளை எடுத்து அதிரடி காட்டி வந்தனர். மாநாட்டில் ராமதாஸ் திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக சில வார்த்தைகள் பேசினார் இதனால் அரசியல் அரங்கில் சற்று அதிர்வலை ஏற்பட்டது. ஒருவேளை ராமதாஸ் அதிமுக கூட்டணி அல்லாமல் திமுக கூட்டணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் திமுக தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது மேலும் திருமாவளவன் பாமக உள்ள கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.   முதலமைச்சர் ஸ்டாலின் பாமக உடன் திமுக கூட்டணியா என்ற கேள்விக்கு அது வதந்தி என்று பாமக திமுக கூட்டணி என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பாமக தைலாபுரம் தோட்டத்தில் ஒரு சில நிர்வாகிகளும் பனையூர் அலுவலகத்தில் அன்பு மணியுடன் ஒரு சில நிர்வாகிகளும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வந்தனர் போதாக்குறைக்கு ராமதாஸ் அன்புமணி மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்

இந்த மோதல் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னாள் சென்னை மேயர் எம்ஜிஆர் தீவிர விசுவாசி சைதை துரைசாமியும், ஆடிட்டர் குருமூர்த்தியும் ராமதாசை சந்தித்து ஒன்றிணைய வேண்டிய அவசியம் குறித்தும் பிரிந்து கிடந்தால் அது பாமகவிற்கும் வன்னியர் சமூகத்திற்கும் லாபம் தராது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் போன்ற கருத்துக்களை தெரிவித்ததாகவும்  மேலும் மகனுடன் மோதலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர் இந்த நிலையில் ராமதாஸ் தற்போது இறங்கி வந்திருப்பதாகவும் அன்புமணியும் ராமதாஸ் சந்தித்து தன் பக்கம் உள்ள கருத்துக்களை தெரிவித்து மோதலை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாகவும் தகவல்கள் தைலாபுரத்தில் இருந்து வந்த வண்ணம் உள்ளது. அமித்ஷா மதுரையில் உள்ள நிலையில் பாமக சார்பில் அன்புமணி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை அதே நேரத்தில் மூன்று மாதத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். சென்னைக்கு சென்றுள்ள ராமதாஸ் மகள்களை சந்தித்து குடும்ப ரீதியாகவும் பேசி இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணிக்கு செல்வது என்றும் அதிமுகவிடம் அதிகம் தொகுதிகளை பெற வேண்டும். மாநிலங்களவை உறுப்பினரையும் அதிமுகவிடம் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது பேசிப் பெற வேண்டும் என்று ராமதாஸ் இருப்பதாக தகவல்கள் வருகிறது

  • திலீபன் அய்யனார்