தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறில் கணவனை கொலை செய்து குழி தோண்டி புதைத்த மனைவி உட்பட 3 பேருக்கு தென்காசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
கடந்த காலங்களில் கணவனே கண்கண்ட தெய்வம் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்றெல்லாம் இருந்து வந்த தமிழர்களின் கலாச்சாரங்களை சீரழிக்கும் வகையில் தென்மாவட்டங் களில் பல்வேறு தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.
குறிப்பாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள மேல பட்டமுடையார் புரம் பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வந்த வேல்துரை என்பவரின் மனைவி பேச்சியம்மாள், தான் குடியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளருடன் கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டு அதற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலன் மூலம் கார் மோதி கொலை செய்த சம்பவம் அரங்கேறியது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட செயல் வேல்துரையின் மனைவி பேச்சியம்மாள் அவரது கள்ளக்காதலன் முத்து சேர்மன் (எ) சுதாகர் கார் டிரைவர் ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அதே பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள பனையடிப்பட்டி பகுதியில் சலூன் கடை வைத்திரருக்கும் பரமசிவன் என்பவரது மனைவி உமா அதே பகுதியைச் சார்ந்த ஒருவருடன் நீண்ட காலமாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண் கள்ளக்காதலனின் தொடர்பை துண்டிக்க முயற்சித்த நிலையில் ஒருநாள் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவரது கள்ளக்காதலன் மணிக்குமார் தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் கேரளாவுக்கு தப்பி சென்ற கள்ளக்காதலன் மணிக் குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரே மாதத்தில் இரண்டு கள்ளக்காதல் கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் குழி தோண்டி புதைப்பதாக உள்ளது.
மேலும் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பசும்பொன் இரண்டாம் தெருவை சார்ந்தவர் பாலகிருஷ்ணன் என்பவரது மகன் கருப்பசாமி என்பவரை கடந்த 30.08.2013 அன்று காணவில்லை என்று வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்ற மாரிச் சாமியை போலீசார் விசாரணை செய்த போது காணாமல் போன கருப்பசாமியின் மனைவி மகேஸ்வரிக்கும் மாரியப்பன் என்ற மாரிச்சாமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது பற்றி அறிந்த கருப்பசாமி மகேஸ்வரி, மாரிச்சாமி இருவரையும் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மகேஸ்வரி அவரது கள்ளக்காதலன் மாரியப்பன் (எ) மாரிச்சாமி இருவரும் கருப்பசாமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் இதற்காக திட்டமிட்டு மகேஸ்வரி, மாரியப்பன் என்ற மாரிச்சாமி, மகேஸ்வரியின் தந்தை வீரப்பன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பொன்ராஜ் ஆகியோர் சேர்ந்து கருப்பசாமியை கொலை செய்து மாரியப்பனின் தோட்டத்தில் குழி தோண்டி புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குறிப்பிட்ட அந்த இடத்தை தோண்டி கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீசார் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கருப்பசாமியின் மனைவி மகேஷ்வரி, மகேஸ்வரியின் கள்ளக் காதலன் மாரியப்பன் (எ) மாரிச்சாமி, மகேஸ்வரி யின் தந்தை வீரப்பன் மற்றும் இல்லத்துப் பிள்ளைமார் தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவரது மகன் பொன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேலு, கருப்பசாமியின் மனைவி மகேஸ்வரி அவரது தந்தை வீரப்பன், மகேஸ்வரியின் கள்ளக்காதலன் மாரியப்பன் என்ற மாரிச்சாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் ஆகியோர் திட்டமிட்டு கருப்பசாமியை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே அவர்கள் நான்கு பேர்களும் குற்றவாளிகள் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கின் குற்றவாளியான மகேஸ்வரியின் தந்தை வீரப்பன் இறந்து விட்டதால் மீதமுள்ள மகேஸ்வரி, மாரியப்பன் என்ற மாரிச்சாமி, பொன்ராஜ் ஆகிய
மூன்று நபர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த வழக்கில் மகேஸ்வரி மற்றும் மாரியப்பன் என்ற மாரிச்சாமி இருவருக்கும் தலா ரூபாய் 3000 அபராதமும், பொன்ராஜ்க்கு ரூபாய் 4000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் குட்டி (எ) மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் இருக்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்குவதோடு இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும்.
- எம்.முத்துசாமி