தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஏன் பாரத பிரதமராக கூடாது என புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் திராவிடர் கழக தலைவர் கி வீரமணி
திராவிடர் கழக தலைவர் கி வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 400 கனவு ஒருபோதும் பலிக்காது
பிரதமர் மோடி ஜன்னி கண்ட நோயாளி போல் பிதற்றுகிறார் தமிழர்களை திருடர்கள் என்று நாக்கில் நரம்பில்லாமல் வாக்கில் நேர்மை இல்லாமல் ஓடிஸாவில் பேசி உள்ளார் தமிழ்நாட்டிற்கு ஒன்பது முறை வந்து பிரச்சாரம் செய்த போது தமிழர்களை பாராட்டியவர் இப்போது இப்படி ஒரு கேலிக்கூத்தான குற்றச்சாட்டை கூறுவதுதூன் மோடி தரும் கியாரண்டியா?
பிரதமர் மோடி ஒரு நாளாந்தர பேச்சாளர் நிலைமைக்கு வந்து விட்டார்
நமது திராவிட மாடல் ஆட்சி நாயகர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இதற்கு சரியான கண்டனத்தை சுரீர் என்று தைக்கும் படி தெரிவித்துள்ளார்
சர்வ வல்லமை படைத்த உளவுத்துறை மூலம் பிரதமர் மோடி ஜெகநாதர் கோவில் சாவியை தேடி கண்டுபிடிக்க வேண்டியது தானே ஏன் அவர் அதை செய்யவில்லை
இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தால் மு க ஸ்டாலின் ஆள வந்து விடுவார் என்றும் இந்த 24 கேரட் தேசபக்தர் பேசி வருகிறார் அப்படி மு க ஸ்டாலின் ஆண்டால் தான் என்ன தவறு?
அவரது ஆட்சியின் திட்டங்கள் மற்ற இந்திய மாநிலங்கள் மட்டுமல்ல கனடா அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளும் பின்பற்றி அத்திட்டத்தை செயல்படுத்துகிறார்கள்
உண்மையான தேசபக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்கள் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்று கூறி பெருமிதம் அல்லவா அடைவார்கள் எனக் கூறி உள்ளார்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply