நாமக்கல் மாவட்டம் எரும்பட்டி அருகே அ.வாழவந்தியில் கடந்த டிசம்பர் 15 ம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த
செல்வராஜ் (55), இவரது மனைவி பூங்கொடி (50), இவர்களது மகன் சுரேந்தர் (28) ஆகியோர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் சுரேந்தர் மனைவி சினேகா குடும்பத்தினர் கொடுத்த டார்ச்சரால் தான் சுரேந்தர் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டதாக சுரேந்தரின் சித்தி முத்துலெட்சுமி மற்றும் உறவினர்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேந்தர், சினேகாவிற்கு கூலிப்பட்டியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றதாகவும், திருமணத்திற்கு பிறகு சினேகா தனித்குடித்தனம் செல்ல வேண்டுமென பிரச்சினை செய்து வந்துள்ளார் மேலும் சினேகாவும் அவரது குடும்பத்தினரும் தனித்குடித்தனம் செல்ல வேண்டி சுரேந்தரை சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 01.11.24 ம் தேதி சுரேந்தர் தனது தந்தை செல்வராஜுடன் வேட்டாம்பாடியில் உள்ள சினேகா வீட்டிற்கு சென்று கூட்டுக்குடும்பமாக வாழ சமாதானம் செய்த போது சினேகா குடும்பத்தினர் தகாதவார்த்தைகளால் பேசி அசிங்கபடுத்தி உள்ளனர்.
இதனையடுத்து சுரேந்தர் வீட்டில் சினேகா தொடர்ந்து தனித்குடித்தனம் செல்வது, சொத்து மற்றும் நகைகளை கொடுக்கும் படி டார்ச்சர் செய்து வந்துள்ளார் மேலும் தொடர்ந்து நீங்கள் அடிப்பட்டு சாகுவதை விட நீங்களே தற்கொலை செய்து கொள்ளுங்கள் என கூறியதால் தான் சுரேந்தர், செல்வராஜ், பூங்கொடி ஆகிய 3 பேரும் மனமுடைந்த நிலையில் ஒவ்வொரு வரும் தனித்தனியாக செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்த நிலையில் அதில் தங்களது சாவுக்கு காரணமாகவர்கள் குறித்து பெயர்களை பதிவு செய்து வீடியோவை கோவையில் உள்ள முத்துலெட்சுமி ( மகள்) மேனகாவிற்கு அனுப்பி விட்டு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த நிலையில் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் குறித்து வீடியோவில் மரண வாக்கு மூலம் பதிவு செய்த பின்னரும் எருமபட்டி போலீசார் சம்மந்தப்பட்ட சினேகா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை, இதுகுறித்து பேசக்கூடாது என போலீசார் மிரட்டி வருகின்றனர் எனவே 3 பேரின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து முத்துலெட்சுமியின் மகள் மேனகா அளித்த பேட்டியில் சுரேந்தர், சினேகா ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்த நாளிலிருந்து தனித்குடித்தனம் செல்லவேண்டும் என சினேகா அவரது குடும்பத்தினர் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் தான் தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து வீடியோ பதிவு செய்து தனக்கு அனுப்பி விட்டு 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர். அவர்களின் இறப்புக்கூட சினேகா உட்பட குடும்பத்தினர் வரவில்லை மேலும் இந்த சாவு குறித்து சினேகா குடும்பத்தினர் சுரேந்தரின் தந்தை செல்வராஜ் மீது தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர், சுரேந்தர் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டி எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என்றார் அவர்.
-சங்கர்ஜி
Leave a Reply