தீராத பிரச்சனைகள் சலசலப்பு என்று அதிமுகவில் தினுசு தினுசாய் ஆட்டம்போட்டாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்து எம்எல்ஏ சீட்டு எனக்குதான் என்று அதிமுகவினர் வரிசையில் நிற்கின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி தொகுதியில்!
ஏன் சிட்டிங் எம்எல்ஏ தமிழ்ச்செல்வனுக்கு என்ன குறை? உலக அளவுல ஜோக் அடிச்சா கூட சிரிக்கமாட்டார் துக்க வீட்டிற்கு போய் வந்த மாதிரியே இருப்பார். தன்னுடைய மாமன் மணல் வியாபாரி கந்திலி ஒன்றியம் காக்கங்கரை திருப்பதி மூலம் சில கோடிகளை செலவு பண்ணி மாத்தூர் தென்னரசு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி மாவட்ட செயலாளர் அசோக்குமார் திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி, மறைந்த கந்திலி ஒன்றிய செயலாளர் கே.ஜி.ரமேஷ் உள்ளிட்டவர்கள் ஒத்துழைப்பில் கே.பி.முனுசாமியை திருப்திபடுத்தி எம்எல்ஏ சீட் வாங்கினார் தமிழ்ச்செல்வன்! பல கோடிகளை தவழவிட்ட அனைத்து கட்சியினரையும் அரவணைத்து (குறிப்பாக இதில் சில திமுக நிர்வாகிகளும் அடக்கம்) ஒரு வழியா எம்எல்ஏ ஆனார்.
மத்தூர் ஒன்றியம் நடுப்பட்டு பக்கம் தமிழ்ச்செல்வனுக்கு வீடு என்றாலும், ஊத்தங்கரைக்கு வந்துபோவதை வாம்மா மின்னல் கணக்காய் வைத்துக்கொண்டர்ர. அதிமுக நிர்வாகிகளை மதிப்பதில்லை. தொகுதியில நல்லது கெட்டதில கலந்துக்கறதில்லை தன்னுடைய எம்எல்ஏ வாழ்க்கையை மர்மமாக வைத்துக்கொண்டவர் வெறுத்துப்போன அதிமுக நிர்வாகிகள் மாநில துணைப்பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமியிடம் புகார் மழை பொழிந்தனர். கட்சி நிகழ்ச்சிகளில் பார்க்கலாம் அரசு நிகழ்ச்சிகளில் எப்பொழுதாவது பார்க்கலாம் மற்றபடி ஓட்டுபோட்ட ஊத்தங்கரை தனி தொகுதி வாக்காளர்களுக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை இன்றுவரை இதுதான் நிலவரம். ஒரு பைசா செலவு பண்ற பழக்கமில்லை பேசினால் செலவாகிவிடுமோ என்று ரொம்ப சிக்கனமாகவே பேசுவார் அவ்வளவு பெரிய கஞ்சன் என்று கொதிக்கிறார்கள் ஊத்தங்கரை அதிமுகவினர் ஆனால் ஊத்தங்கரை, மத்தூர் பகுதி திமுகவினரிடம் நேரிடையாக பேசி கமிஷனை வாங்கிக்கொள்கிறார் அதிமுகவினருக்கு அல்வாதான் இப்படியாக எம்எல்ஏ வாழ்க்கையின் பெரும்பகுதியை கடத்தியவருக்கு மீண்டும் எம்எல்ஏ சீட் கேட்க கொள்ளை ஆசை, அதனால கே.பி.முனுசாமி மகன் சதீஷை கூடவே கூட்டிகிட்டு சுத்திகிட்ட இருக்கிறார் அரசியல் பண்றது எப்படினு பழக்கப்படுத்தறாராம் இவருக்கே அரசியல் தெரியாது இவரு இன்னொருத்தருக்கு சொல்லி தர்றார் காலக்கொடுமை என்கின்றனர் மத்தூர் ஒன்றிய அதிமுகவினர் சதீஷ் மூலம் ஒரு ரேட் பேசி மீண்டும் எம்எல்ஏ சீட் வாங்கிடலாம் என்கிற நம்பிக்கையில் நடமாடிக்கொண்டிருக்கிறார் தமிழ்ச்செல்வன். ஆனால் இவருடைய எண்ணத்திற்கு ஊத்தங்கரை தொகுதி அதிமுகவினர் முதற்கொண்டு மாவட்ட செயலாளர் அசோக்குமார் வரை எதிராக இருக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம். வேங்கன் வேடி இரண்டு ஒன்றிய செயலாளர்களோடு மட்டும் நெருக்கம் காட்டும் தமிழ்ச்செல்வன் மற்றவர்களிடம் மட்டும் ஏன் ரொம்பவே தள்ளி நிற்கிறார் என்று சவுண்டு விடுகிறார் சிங்காரப்பேட்டை மூத்த கட்சிக்காரர் ஒருவர், வாரத்திற்கு மூன்று நாட்களாவது எம்எல்ஏ அலுவலகம் வருவார் அதிர்ஷ்டம் உள்ளவர்கள் சந்தித்து ஆசி பெறலாம் மற்றபடி ஊத்தங்கரை தொகுதிக்கும் அதிமுகவினருக்கும் ஒரு பைசாகூட உபயோகமில்லாதவர் தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ மொத்தத்தில் வேஸ்ட்!
தமிழ்ச்செல்வன் செல்வாக்கு ஊத்தங்கரை தொகுதியில் தெளிவாகிவிட்டதால் இந்த முறையாவது தனக்கு கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்போடு முயற்சி செய்கிறார் மத்தூர் நாகரத்தினம், தொகுதியில கட்சியினர் மத்தியில் நல்ல பிரபலம்! அடுத்தவர் டாக்டர் இளையராஜா கட்சியில பதவி வாங்கிய அதே ரூட்ல பயணம் பண்ணி எம்எல்ஏ சீட் வாங்கிடனும்னு துடியாய் துடிக்கிறார். எம்ஜிஆர் நூற்றாண்டு அறக்கட்டளை முக்கிய நிர்வாகி ஊத்தங்கரை ரவுண்டானா அழகுபடுத்திய விஷயத்தில் கணக்கு வழக்கில் தப்பு நடந்து போச்சி, இளையராஜாவின் அப்பா நடேசன் டாக்டர் தொடுத்த பிசிஆர் வழக்கு இரண்டு விஷயங்களுக்கு ஊரில் பெரியதாக பேசப்படுகிறது தப்பி தவறி இளையராஜா எம்எல்ஏ சீட் வாங்கினாலும் ரிசல்ட் பூஜ்யமாகத்தான் இருக்கும் என்கிறார்கள் ஊத்தங்கரை நகரத்தில்!
இரண்டுமுறை எம்எல்ஏவாக இருந்த மனோரஞ்சிதம் நாகராஜ் இந்தமுறை நிச்சயம் எம்எல்ஏ சீட் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். மாவட்ட செயலாளர் அசோக்குமாரும் மாநில துணைப்பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமியும் ஆர்வம் காட்டுவதாக கட்சியினர் மத்தியில் பேசுகின்றனர். இரண்டுமுறை எம்எல்ஏவாக இருந்தபோது நல்லாவே சம்பாதித்தார். நிறைவாகவே செலவு செய்தார் என்கிற பெயர் கட்சியினர் மத்தியில் இருக்கிறது லேடி கோட்டாவா இருந்தா மனோரஞசிதம் ஜென்ஸ் கோட்டாவா இருந்தா நாகராஜ் இப்படி ஒரு தரப்பு சொல்லிக்கொண்டிருக்கிறது.
தொகுதியில, வன்னிய கவுண்டர் வெள்ளாள கவுண்டர் அரசியல் வேகமெடுத்திருப்பதை பார்க்க முடிகிறது தமிழ்ச்செல்வன் ஒன்றும் செய்யாத எம்எல்ஏ அதற்கு காரணம் ஒன்றையும் செய்யவிடாத நிர்வாகிகள் இப்படி சுருக்கமா சொல்லலாம்.
– ஆலவாயர்
உதவி: பாலாஜிமணி
தமிழ்ச்செல்வனா…மனோரஞ்சிதமா…நாகராஜா…இளையராஜாவா…- ஊத்தங்கரை நிலவரம்!
