Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பேருந்து நிலையத்தில் டாஸ்மாக்…காய்கறி மார்க்கெட்டில் பார்..ஓமலூர் அவலம்?

சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் பெங்களூர்,மேட்டூர் மற்றும் பல கிராமங்களை உள்ளடக்கிய பகுதி, இங்கு தினமும் லட்சகணக்கான மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையம்.இங்கு காய்கறி மார்கெட் அதிகாலை 2மணி முதல் செயல்படும்.

இங்கு பல வருடங்களாக அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதிகாலை முதலே குடிகாரர்கள் கூட்டம் அலைமோதும்.

அரசு கட்டிக் கொடுத்த காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டு ஒருவருடம் ஆகிறது இன்னும் பயன்பாட்டுக்குத் திறக்கப்படவில்லை.
இதனால் வியாபாரிகள், சாலையிலேயே காய்கறிகளைப் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள்.

இங்க இருக்கும்  வியாபாரிகளிடம் பேசிய போது ஏன் இந்த மார்க்கெட் திறக்கப்படவில்லை என்று கேள்வி  கேட்டதற்கு ,கட்சிகாரர்கள் கடையை பிரிப்பதற்கு உள்ளே போட்டோ போட்டி நடைபெறுகிறது அதனால் இங்கு கடையை திறக்கப்படாமல் இழுபறியில் உள்ளது. இவர்கள்  ஒரு பக்கம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்  இன்னொரு பக்கம் குடிகாரர்கள் மத்தியில் நாங்கள் அவதிப்படுகிறோம்.  நாங்கள்தான் மார்க்கெட் உள்ளே சென்று வியாபாரம் செய்யமுடியாமல் சாலையில் இப்படி வெயிலிலும், மழையிலும் கஷ்டப்படுகிரோம்”  குமுறலாகக் கொட்டித் தீர்த்தார்கள் வியாபாரிகள்!
நம்மிடம் பேசிய கல்லூரி மாணவிகள் .

மதுவை வாங்கி வந்து கூட்டம் கூட்டமாக அங்கேயே உட்கார்ந்து குடித்துவிட்டுச் சண்டை செய்வார்கள் , தகாத வார்த்தையில் பேசுகிறார்கள் அண்ணா ,நாங்கள்  இந்த வழியாக கல்லூரி செல்வதற்கும் பேருந்து நிலையம் வரும்பொழுது குடித்துவிட்டு சட்ட விரோத கும்பல்கள் அவ்வப்போது சண்டையிட்டு கொள்கிறார்கள் . அருகில்  இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கும் செல்ல முடியவில்லை  அருகில் உள்ள கழிவறைக்கு செல்ல முடியாத அவல நிலையாக உள்ளது. இங்கு குடிக்க வரும் சட்டவிரோத கும்பல்கள் தினம் பெண்களை கேலி கிண்டல்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தினமும் இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டுதான் நாங்கள் கல்லூரிக்கும், வீட்டிற்கும் செல்கிறோம்.காவல் நிலையம் மிக அருகில் தான் உள்ளது, காவலர்களும் ரோந்து பணியில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குடிகார ரவுடிகளை காவல் துறையினர் ஒன்றும் செய்வதில்லை.

இரு சக்கர வாகன ஸ்டாண்டு உள்ளது. வண்டிகளை எடுத்துச் செல்லும் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் அந்த வழியே செல்லும் போது முகம் சுளிக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்று கூறினார்கள்.
அந்த மார்க்கெட் வளாக இடத்தையே பார்-ஆக மாற்றி பேரூராட்சி நிர்வாகமும்,காவல்துறை நிர்வாகமும், வியாபாரிகள்  பயன்பாட்டிற்கு கொண்டுவருவது கேள்விக்குறியாக உள்ளது.

– இரா.சீனிவாசன்