Save 20% off! Join our newsletter and get 20% off right away!

திருவள்ளூர்-முதல்வர் ஸ்டாலின் படத்திற்கு,ரோஜாப்பூ மலர் தூவி அமைச்சர் நாசர் மரியாதை?திமுகவினர் அதிர்ச்சி

திருவள்ளூர் அருகே நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் திருவுருவப்படத்திற்கு ரோஜாப்பூ மலர் தூவி அமைச்சர் நாசர் மரியாதை செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது: படத்திற்கு அருகிலேயே மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டு நிர்வாகி நின்று கொண்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

திருவள்ளூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது

பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி  மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கிளாம்பாக்கம் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

அப்போது நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் அருகில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் படத்திற்கும் ரோஜா பூ மலர் தூவி மரியாதை செலுத்திய நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி நிலையில்  முதல்வர் ஸ்டாலின் படத்தின் அருகிலேயே திமுக நிர்வாகி ஒருவர் மெழுகுவத்தி ஏந்தி நின்று கொண்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

-ரவிச்சந்திரன்