சேலம் மாநகரம் கட்சி சீரமைப்பு… புகாருக்கு உள்ளான நபர்களை நீக்கம்? அதிமுகவில் சலசலப்பு …

அதிமுக மாநகர மாவட்டம் என்றாலே பரபரப்புக்கும் பஞ்சாயத்துக்கும் பஞ்சமில்லாத மாநகரமாவட்டமாக உள்ளது. சமீபகாலமாக நிர்வாகிகள் மாற்றங்கள் புதிய நிர்வாகிகள் போடுதல் என்று பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது. தற்போது  மாநகர மாவட்டத்தில் என்னதான் நடந்து கொண்டிருகிறது என்று பார்ப்போம்.

எடப்பாடி பழனிசாமியின் நீண்ட கால நண்பருமான  மொரப்பூர் முன்னாள் எம்எல்ஏவுமான சிங்காரம், சேலம் மாநகர்மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாஜலத்தின் மீது பக்கம் பக்கமாக ஆதாரத்துடன் புகார்களை நிர்வாகிகள் அடக்கினார்கள். முழுமையாக விசாரித்த சிங்காரம், வெங்கடாசலத்தின் ‘அபார வளர்ச்சியைக்’ கண்டு அதிர்ந்து போனார். இதுகுறித்த விரிவான அறிக்கையை  எடப்பாடி பழனிசாமி இடம் சமர்ப்பித்தார்.அதன் பிறகு அவரின் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கட்டம் கட்டப்பட்டார்.    மேலும் மாநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு, வடக்கு, தெற்கு தொகுதியில் கடந்த சில மாதங்களாகவே ஆய்வு மேற்கொண்டு வந்தார். அனைத்து நிர்வாகிகளையும் மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் அனுமதி வழங்கினார்.

இதையடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் நீண்ட நாட்களாக பொறுப்பில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னாள், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர் ஜி.வெங்கடாசலம்.
9ஆண்டுக்கும் மேலாக இந்தப் பதவியில் இருந்து வந்தார்.ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாகவே கட்சி வளர்ச்சிக்காக எந்தப்
பணிகளையும் செய்யவில்லை.
இரண்டு முறை எம்எல்ஏ ஆக இருந்தவருக்கு எந்தெந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரியாதா? தொடர்ச்சியாக சேலம் வடக்கு தொகுதி  திமுகவின் கோட்டையாகவே மாறிவிட்டது,அதை சரி செய்ய அவரால் முடியவில்லை,தேர்தல் வேலை செய்யாமல் தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தை, ஆன பகுதிகளில் முறையாக பட்டுவாடா செய்யாமல் பதுக்கிக் கொண்டார்.
அடுத்து நடந்த மாநகராட்சித் தேர்தலில் அவர் நினைத்து இருந்தால் மேலும் பலரை கவுன்சிலர்களாக ஜெயிக்க வைத்திருக்க முடியும். ஆனால் கடைசி வரை சொந்த கஜானாவை திறந்து செலவழிக்க மறுத்துவிட்டார்.

சேலம் மாநகர் மாவட்டத்திற்கு தற்போது புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளவர்களில் ஒருவரான எம்.கே.செல்வராஜ், தெலுங்கு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த எம்.கே.செல்வராஜ், நடுவில் சிறிது காலம் ஓ.பி.எஸ். அணிக்கு தாவிவிட்டு, மீண்டும் எடப்பாடியுடன் ஐக்கியமாகி விட்டார். சேலம் தெற்கு தொகுதியில் தெலுங்கு, கன்னடம் பேசும் செட்டியார் சமூகத்தினர் கணிசமாக உள்ளதாலும், மற்றொரு பொறுப்பாளரான ஏ.கே.எஸ்.எம்.பாலு, எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசி. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மேற்கு, சேலம் வடக்கில் பெரும்பான்மையாக வன்னியர் சமூகத்தைக் குறிவைத்து, பாலுவை நியமித்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இது தொடர்பாக சேலம் மாவட்ட பொறுப்பாளரான சிங்காரத்திடம் கேட்டபோது, ”2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி கட்சியில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. யாருக்கும் எந்தப் பதவியும் நிரந்தரமானது இல்லை.

அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது தற்போது மாநகர் மாவட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்து கொண்டுள்ளது, நிர்வாகிகளும் மாத்திட்டே இருக்காங்க புதிய நிர்வாகி 2  மாவட்ட பொறுப்பு போட்டு இருக்காங்க இவங்களுக்கு, வெங்கடாஜலமே பரவால்ல நிலைமையில இருக்குது, புதிய வட்டச் செயலாளர்கள் அவர்களுடைய செயல்பாடு அதிருப்தி அளிக்கும் வண்ணம் உள்ளது . கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்துல எங்களுக்கு நிர்வாகிகளுக்கு எதுவுமே செய்யல எந்த ஒரு அரசாங்கம் பதவி எங்களுக்கு கிடைக்கல தற்போது வந்து பூத் கமிட்டி அமைக்க உறுப்பினர்கள் செருங்க
கட்சிக்கு இளைஞர்கள் கொண்டு வாங்கன்னு சொல்லி  எங்களிடம் தொடர்ச்சி வேலை வாங்கிட்டு இருக்குக, நிர்வாகிகள் எங்களுக்கு தேவையான செலவுக்கு தேவையான பணத்தை ஏதும் கொடுக்கிறது இல்லைங்க, நாங்க எவ்வளவுதான் கையில் இருந்து காசு செலவு பண்ண முடியும் ஆட்சி இருக்கும் போது எங்களால சம்பாதிக்க முடியல இப்ப ஆட்சி இல்லாத நான்கு வருஷமும் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை, இப்ப வந்து எங்களை போய் செலவு செய்யுங்க,   பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்க  ஆதார் எண் அனைத்தும் இணைக்கணுமா, அதை நாம் மக்களிடம் போய் கேட்கும் போது ஏன் எங்கள வச்சு லோன்  வாங்குறீங்களா , இது போன்ற நிறைய கண்டிஷன் போட்டுட்டு இருக்காங்க எந்த வேலை செய்றதுன்னு எங்களுக்கும் தெரியல,இதுக்கு பத்தா குறைய சம்பாதிச்சவங்க எல்லாம் ஒதுங்கிட்டாங்க,  ஆட்சி இருக்கும் போதும் ஒரு ரூபாய் பிரயோஜனம் இல்லாம போயிருச்சு ,அன்னைக்கு இருந்த வெங்கடாஜலத்தை பத்தி நாங்க அவ்வளவு குறை சொன்னோம் அவ்வளவு பிரச்சினை இருக்குன்னு சொன்னா, எடப்பாடி பழனிசாமி அவர்கள் காதிலேயே போட்டுக்கல ஆட்சி முடிந்து அவர் நல்ல வளமா செல்வ செழிப்போடு சம்பாதிச்சுட்டாங்க, இப்போ ஓரம் கட்டப்பட்ட அவருக்கு என்ன நஸ்டம், தேர்தல் வந்தால் எங்களது படிச்சுக்கிட்டு அந்த வேலை செய்ய இந்த வேலை செய்யுங்க என்று சொல்லி டார்ச்சர் பண்றாங்க, தேர்தல் முடிஞ்ச உடனே எங்கள கண்டுக்கறதில்ல ,இவ்வாறு சூழ்நிலையில் நாங்க என்ன செய்ய முடியும். புதுசா வந்திருக்க பொறுப்பாளர் வந்து நேர்மையா செயல்பட்டாலும் மாநகரில் இருக்கிற பல்வேறு பிரச்சினைகளை அவரால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. நம்மிடம் பல்வேறு குறைகளை சொல்லி சலிச்சுக்கிட்டாங்க.

கட்சி சீரமைப்பு என்ற பெயரில் சொந்த மாவட்டத்தில் எடப்பாடி – சிங்காரம் கூட்டணி புகாருக்கு உள்ளான நபர்களை நீக்கி வருவது கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேவேளையில், பதவி இழந்த தரப்பினர் த.வெ.க.,வுக்கு மற்றும் திமுகக்கும் தாவவும் நூல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் .

– இரா.சீனிவாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *