தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு, சீருடைக்காக ஆண் டெய்லர் மூலமாக அளவீடு… மாணவர் மற்றும் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு,
சீருடைக்காக ஆண் டெய்லர் மூலமாக அளவீடு…
மாணவர் மற்றும் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு சீருடைக்காக ஆண் டெய்லர் மூலமாக அளவீடு செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி , மாணவர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தினர் போராட்டம் – கைது தள்ளுமுள்ளு
ஏற்பட்டது.
10 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆண் டெய்லர் மூலமாக கட்டாயபடுத்தி அளவெடுக்க வைத்ததாக பள்ளி ஆசிரியை மற்றும் டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்
பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்களை கைது செய்ய கோரியும், இனி ஆண் டெய்லர்கள் பயன்படுத்த கூடாது, பள்ளி நிர்வகித்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்கள் சங்கம், மற்றும் மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

– நா.ரவிச்சந்திரன்