திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் மொத்தம் 550-க்கும் மேற்பட்ட தெருக்களில் வீடு, கடைகள், வணிக வளாகங்கள் என, 13 ஆயிரத்து 500 கட்டடங்கள் உள்ளன. இந்தகட்டடங்களில்இருந்து நாள்தோறும் 50 லட்சம் லிட்டர்கழிவுநீர்வெளியேற்றப்படுகிறது. இந்தகழிவுநீர்தெருக்களில்வெளியேற்றுவதால்நோய் தொற்று அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்துகழிவுநீரை அகற்றரூ.54.79 கோடியில்பாதாளசாக்கடை திட்டம், கடந்த 2008-இல்தொடங்கி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவு பெற்றது. திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர்ஊராட்சியைஇணைக்கும் பகுதியில் இந்தசுத்திகரிப்புநிலையம்அமைக்கப்பட்டது. இந்தபாதாளசாக்கடை திட்டத்தின் கீழ் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரானது குழாய் மூலம் காக்களூர் ஊராட்சி தேவா நகரில் கட்டப்பட்டு உள்ளகழிவுநீர்சுத்தகரிப்புமையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில்திறந்தவெளியில் உள்ள கால்வாயில் கழிவு நீர் செய்வதால் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதோடு டெங்கு மலேரியா போன்ற பல்வேறுநோய்களுக்கும்ஆட்படுவதாகஅப்பகுதி வாசிகள் நகராட்சிநிர்வாகத்திற்கும்மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்ந்து புகார்கள் கொடுத்துவந்தனர். இதனையடுத்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுவதற்கான கட்டுமானப் பணிகள் தற்பொது நடைபெற்று வருகிறது. ஆனால் துருப்பிடித்த, மிகவும் நெளிந்த நிலையில் உள்ள இரும்பு கம்பியை வைத்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆயிரக் கணக்கிலானசுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை வெளியேற்றுவதற்காககட்டப்படும் கால்வாயை தரமற்ற இரும்பு கம்பியால் கட்டுவதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பணியை ஆய்வு செய்து, தரமான இரும்புக் கம்பியால் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கே.ரவிச்சந்திரன்