நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை. நமக்கு கற்பிக்கப் பட்ட காரணங்கள் தான் தவறாக இருக்குமே தவிர, முன்னோர்கள் சொன்னதில் தவறொன்றும் இருந்ததில்லை.
பழங்காலத்தில்திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது. ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது.
“வாழை மரம்” ஒரு முறை தான் பூத்து காய் காய்க்கும், அதுபோல் மனித வாழ்வில் “ஒருமுறைதான்” திருமணம் நடைபெற வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தவே வாசலில் வாழை மரத்தை கட்டி வைத்தார்கள்.
வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் கல்யாண வீட்டில் வாழை மரத்தை கட்டுகிறார்கள்.
வாழைக்கு ஒரு தார், வாழ்க்கைக்கு ஒரு தாரம்!!
– மதுரை மணிகண்டன்