திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் சேகல் ஊராட்சி கிராமத்துக்கு உட்பட்ட தீவம்பாள்பட்டிணம் அரசு நடுநிலைப் பள்ளியில் தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் கொண்டதால் மாணவர்கள் தலையில் இடிந்து விழுந்து நான்கு மாணவர்கள் மருத்துவமனை சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் தரமற்ற முறையில் கட்டுமான பணி மேற்கொள்ளும் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாமணி கடை தெருவில் சாலை மறியல் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்து பிறகு விடுதலை செய்துள்ளனர்.
-நாக அறிவழகன்