அனைவருக்கும் வணக்கம்.
முப்பது வருடங்களை கடந்த அச்சு ஊடக பயணத்தில் கடந்த நான்கு வருடங்களாக உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை என்கிற முழக்கத்தோடு “தி பன்ச் நியூஸ்.காம்” ஷ்ஷ்ஷ்.tலீமீஜீuஸீநீலீஸீமீஷ்s.நீஷீனீ என்கிற தமிழ் செய்தி இணையதளம் இயங்கிக்கொண்டிருக்கிறது. சமூகத்தில் அனைத்து தரப்பிலும் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு, நல்ல விஷயங்களையும் சுட்டிக்காட்டுவோம் தவறுகளை சுட்டிக்காட்டும் விஷயத்தில், வலியவர் எளியவர் என்கிற பாரபட்சம் இருக்காது. வீண் வதந்திகள் செய்திகளை கூட்டியோ குறைத்தோ தரமாட்டோம். நல்லவை கெட்டவை எதுவானாலும் உள்ளது உள்ளபடி தருவோம் என்பதை உறுதியாக நம்பலாம். அரசியல் முதற்கொண்டு, ஆன்மீகம், விளையாட்டு, சினிமா, விவசாயம் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் என நாட்டு நடப்புகளை “தி பன்ச் நியூஸ்.காம்” இணையதளத்தில் வாசிக்கலாம். இதற்காக தமிழகம் முழுவதும் எமது செய்தியாளர்கள் ஆர்.அருண், கே.வி.ஆர்.கோபி, திலீபன்அய்யனார், பெரணமல்லூர் சேகரன், மரியபெல்சின், மோகன்தங்கசாமி, இரா.நந்தகோபாலகிருஷ்ணன், ம.மு.கண்ணன், சாமிநாதன், மாரியப்பன், மேகராஜ், முருகன் லட்சுமணன், கௌரிசங்கர், இரா.சீனிவாசன், கனிராஜ், சு.மதி, ஜெயபால், ஆர.மதன், பா.ஜோதிநரசிம்மன், இரா.ரவிக்குமார், இரா.சுரேஷ், பா.மணிகண்டன், விஜயகுமார், மதுரைமணிகண்டன் உள்ளிட்டவர்கள் களத்தில் இருக்கிறார்கள். இணையதளத்திற்கு தினமும் விசிட் பண்ணுங்க பதிவுகளை வாசியுங்கள்.
ராஜாராம் கணேசன்
ஆசிரியர்