விண்வெளி கொள்கை Vs மாப்பிள்ளை கொள்ளை தமிழக முதல்வரின் உறவினரான மாப்பிள்ளை சார் புதிதாக வானம் ஸ்பேஸ் எனும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதற்கும் தமிழக அரசு விண்வெளி துறையில் முதலீடு செய்வதற்காக விண்வெளி துறைக்கான கொள்கை ஒன்றை அறிவித்திருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ‘விவரம் அறிந்த’ தொழில் துறையினர் சிரித்து கொண்டே தெரிவிக்கிறார்கள். *** மாநிலங்களவை உறுப்பினராகும் அண்ணாமலை பாஜகவை ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் வளர்த்திருப்பதாக மார்தட்டிக் கொள்ளும் …( ஆனால் சொத்து மதிப்பை உயர்த்திக் கொண்டுள்ள) முன்னாள் காவல்துறை உயர் அதிகாரியான அண்ணாமலை- மாநிலத் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தாலும், விரைவில் வட இந்தியாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார். *** டிடிவியாரிடம் பணிந்த எடப்பாடியார் அதிமுகவின் இரட்டை இலை அதிமுகவின் தலைவர் ஜெயலலிதாவின் புகைப்படம் அதிமுகவின் கொடியின் வண்ணம் ஆகிய மூன்றினையும் டிடிவி தினகரன் பயன்படுத்த தடை விதிக்க கோரி ஓபிஎஸ் + இ பி எஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர். நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்த போது எடப்பாடி தரப்பு இந்த வழக்கை வாபஸ் வாங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் டிடிவியாரிடம் எடப்பாடியார் தரப்பு பாஜகவின் அழுத்தம் தாங்காமல் பணிந்து விட்டது என எம்ஜிஆர் பக்தர்கள் புலம்புகிறார்கள். *** வன்னியர்களுக்கு இந்த சித்திரை திருவிழாவா? ஒற்றுமை திருவிழாவா? தலைவர் பதவி குறித்த மோதல் அன்புமணியிடமும் ராமதாசிடமும் இன்னும் தொடர்கிறது. சித்திரை திருவிழாவில் இருவரில் யார் புறக்கணிக்க போகிறார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆகவே இருக்கிறது. இவ்விஷயத்தில் அன்புமணி டெல்லி ஆளும் கட்சித் தலைமையை அனுகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அன்புமணி ராமதாஸிற்கு எம் பி சீட் கிடைப்பதற்கான டிராமாவாகத்தான் கட்சியின் சீனியர்கள் பார்க்கிறார்கள். *** ஜி கே. வாசன் Vs தமிழக இஸ்லாமியர்கள் வக்பு திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த ஒரே தமிழக மாநிலங்களவை உறுப்பினரான ஜிகே வாசன் மீது இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பாபநாசம் தொகுதிக்குட்பட்ட இஸ்லாமியர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய காத்திருக்கிறார்கள். பாஜகவின் பேச்சைக் கேட்டு வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஜி கே வாசனுக்கு தற்போது சொந்த ஊரில் அரசியல் செய்வதில் சிரமப்படுகிறார் என்பதுதான் யதார்த்தம். விரைவில் இவருக்கும் மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படலாம். *** அமலாக்க துறையின் அடுத்த விக்கெட் யார்? அமலாக்கத்துறை – மத்திய ஆளும் கட்சியின் ஆதிக்க அரசியலுக்கு எதிராக இருப்போரை பலவீனமாக்கும் ஆயுதமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் அதன் அடுத்த இலக்கு கட்சியில் சீனியராகவும் பல ரகசியங்களை தனக்குள் வைத்துக் கொண்டிருப்பவருமான துரைமுருகன் தான். இதனால் துரைமுருகன் தெலுங்கு லாபி அமைச்சரான எ. வ. வேலு – வெங்கையா நாயுடு மூலமாக சமாதான தூது விட்டிருக்கிறாராம். *** நீதிமன்றம் தலையிட்ட பொன்முடியின் வெறுப்பு பேச்சு அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் விலை மாதுவின் சைவ வைணவ பேச்சு தொடர்பாக மூத்த அமைச்சர் பொன்முடி இணையத்தில் கடும் கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவ்விகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் கையில் எடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது. தமிழக அரசு வழக்கம்போல் தூது விடும் அரசியலை பின்பற்றி வருகிறது.…