நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேளுகுறிச்சி நிக்ஷிஸி தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்து 2 கார்களில் சுமார் 18 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சம் விற்பனை செய்ய முயன்ற சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஙிஷிழிலி முன்னால் ஊழியர் அப்துல் ஜெலில்(67) , கட்டிட தொழிலாளி ரவி (54), பேளுகுறிச்சி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (65) ஆகியோர் சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கைது
பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலம் எச்சம்
சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள 18 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரிசை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற 3 பேரை ரகசிய தகவலின் அடிப்படையில் இராசிபுரம் வனத்துறையினர் கைது செய்தனர்.
நறுமண பொருள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும் திமிங்கலம் எச்சமான தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீசை பேளுகுறிச்சி அருகே இரண்டு கார்களில் ஒரு கும்பல் விற்பனை செய்ய முயல்வதாக நாமக்கல் மாவட்ட வன பாதுகாவலர் கலாநிதிக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இராசிபுரம் வனச்சரக அலுவலர் சத்யா தலைமையில் தனி குழு அமைத்து பேளுகுறிச்சி பகுதியில் சோதனை யில் ஈடுபட்ட போது நிக்ஷிஸி தோட்டம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜிழி 30 வி 1279, ரிலி 27 சி 4434 என்ற கார்களை சோதனை செய்த போது அதில் திமிலங்கத்தின் எச்சம் விற்பனைக்கு பதுக்கப்பட்டுள்ளது தெரிந்தது.
இதை சட்ட சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த மூன்று பேர் மற்றும் இரண்டு கார்கள் ,4 செல்போன்கள் பறிமுதல் செய்த வனத்துறையினர் இவர்களை கைது செய்தனர்.
மேலும் இந்த பல கோடி மதிப்பிலான எச்சம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது இதில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .
கடலோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் இந்த திமிங்கல எச்சம் விற்பனை தற்போது நாமக்கல் பகுதியில் பிடிபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த எச்சமானது கொல்லிமலை மேக்கனிகாடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் கொண்டு வந்து கொடுத்ததாக கூறப்படும் நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதால் அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது .
– கௌரி சங்கர்