திருவள்ளூர் அருகே ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை சட்ட விரோதமாக போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளிடம் இருபதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்தனர்.
வழக்கறிஞர் தலைவர் கே.. நாகராஜ் அளித்த புகார் மனுவில்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ரூ. 2 கோடி மதிப்புள்ள 22 சென்ட் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு தரிசு நிலம் உள்ளது.
இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார், பாலாஜி, சின்னதுரை, நடராஜன், நரேஷ், பார்த்திபன், தமிழழகன் உள்ளிட்ட 8 நபர்கள் ஆக்கிரமித்து சட்ட விரோதமாக போலி அரசு முத்திரைகளை தயாரித்தும், அரசு அதிகாரிகளின் கையெழுத்துக்களை போலியாக போட்டும் ஆவணங்கள் தயாரித்து திருவள்ளூர் சார்- பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த சென்னையை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் இதில் பாலாஜி சந்தோஷ் குமார் ஆகிய இருவர் நில மோசடி தொடர்பாக பல ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்ததாக திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு புற காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தை சட்டவிரோதமாக ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயலும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க வேண்டும் என்று 50க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதியைச் சார்ந்தவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் கொடுத்தனர்
இதேபோன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே
டோல்கேட் பகுதியில்
மற்றும் ஐ சி எம் ஆர் பகுதியில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் தயார் செய்து வருவாய் அலுவலர்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு அரசு முத்திரைகளை பயன்படுத்தி கோடிக்கணக்கான ஆவணங்கள் தயார் செய்தும் அதற்கு பட்டா பெற்று விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது இப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் கிராம நத்தங்கள் அனைத்தும் சமூக விரோதிகள் போலி ஆவணங்கள் தயார் செய்தும் சட்ட விரோதமாக பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட வருவாய் அலுவலரிடமும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை இதனைத் தொடர்ந்து மறைமுகமாக வருவாய்த்துறை அலுவலர்கள் உதவியுடன் அப்பகுதியில் உள்ள சமூக விரோதிகள் போலி ஆவணங்கள் தயார் செய்து இன்றுவரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது இதன் தொடர்ச்சியாக தான் இன்று அரசு போலி முத்திரைகளை தயாரித்து பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்டவர்கள் ஆதாரத்துடன் கண்டுபிடித்து மாவட்ட ஆட்சியரிடமும் கண்காணிப்பாளரிடமும் அப்பகுதி சேர்ந்த வழக்கறிஞர்கள் தலைவர் நாகராஜ் தலைமையில் புகார் கொடுத்துள்ளனர்
இதை சென்னையை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், மேலும் பாலாஜி மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவர் மீது நில மோசடி தொடர்பாக பல வழக்குகள் திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரசு புறம்போக்கு தரிசு நிலத்தை சட்ட விரோதமாக ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயலும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
– கே.ரவிசந்திரன்