மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே அதலை கண்மாய் அருகில் அழுகிய நிலையில் காட்டுப்பன்றி ஒன்று இறந்து கிடப்பதாக மாட்டுத்தாவணி வனச் சரக அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதனால், உதவி வன பாதுகாவலர் சீனிவாசன் தலைமையில் வனச்சரக அலுவலர் குமரேசன், வானவர்கள் பூபதி ராஜன், ராஜ் குமார், வனக்காப்பாள ர்கள் துரைராஜ், ராம் பிரபாகர் உள்ளிட்ட சிறப்பு வன பாதுகாப்பு படையினர் அதலை கண்மாய் பகுதியில் கண்காணிப்புடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில்,
நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அதலை கண்மாய் அருகில் மதுரை தபால் தந்தி நகரை சேர்ந்த ஜோயல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 2 மர்ம நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் , திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகில் உள்ள லிங்கவாடியை சேர்ந்தவர்கள் மணி.(70), ராமையா (43)என்று தெரியவந்தது. மேலும், அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்த போது, காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த வெடிக்காத 31 நாட்டு வெடி குண்டுகள் இருந்தது தெரிய வந்தது.
உடனே,
அதை பறிமுதல் செய்து, மணி, ராமையா இருவரையும் மதுரை மாட்டுத்தாவணி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனால் ,
அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
– நா.ரவிச்சந்திரன்