Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ஈரோடு இடைத்தேர்தல்ஆளுங்கட்சியின் அதிகாரம்…மக்களைப் பட்டியில் அடைக்க விருப்பமில்லை…எதிர்க்கட்சிகள் போட்டியிலிருந்து விலகல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிட உள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு முகம் சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்கம் என்பது இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் இயங்காமல் இருந்தால் அது பிணத்திற்கு சமமாகும். வெற்றியோ, தோல்வியோ எப்படி இருந்தாலும் தேர்தல் பணி செய்ய வேண்டிய அவசியம் அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. அதை அதிகாரத்தைக் கண்டு அஞ்சுகிர அமைப்பாக மாற்றுவது ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லது அல்ல. அந்த வகையில் அதிமுக போட்டியிடாது அந்த கட்சியின் இயலாமை தனத்தை வெளிப்படுத்துகிறது இந்த நிலையில்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்படி நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுகிறார். சீதாலட்சுமி, ஆசிரியராகப் பணியாற்றியவர். அரசியல் கட்சிகளில் சீமான் மட்டுமே வேட்பாளர் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் போட்டியிடும் சந்திரகுமார் தேர்தல் அரசியலுக்கு புதிதானவர் அல்ல.வி.சி.சந்திரகுமார், முதுநிலை பொது நிர்வாகம் படித்துள்ளார். ஜவுளி மொத்த வியாபாரம் செய்துவரும் சந்திரகுமார், 1987-இல் அ.தி.மு.க-வில் வார்டு பிரதிநிதியாகத் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பின்னர் விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவரானார். தே.மு.தி.க ஆரம்பிக்கப்பட்ட போது அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், விஜயகாந்த்தின் முக்கியத் தளபதியாகவும் விளங்கினார்.
2011 தேர்தலில் அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது, ஈரோடு கிழக்குத் தொகுதியில் தே.மு.தி.க சார்பில் நின்று சந்திரகுமார் வெற்றி பெற்றார். கருத்து வேறுபாடு காரணமாக தே.மு.தி.க-வில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்த சந்திரகுமாருக்குக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதுடன், 2016 தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவிடம், வி.சி.சந்திரகுமார் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தங்க வைப்பதால் அது தொகுதியை காங்கிரசுக்கு பட்டா போட்டு கொடுத்த மாதிரி ஆகிவிட்டது இந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த இருவர் இறந்து போனது சந்திரகுமாருக்கு வழி விட்டது போல ஆகிவிட்டது இனி அது திமுக தொகுதி தான்.
சீமானுக்கு பிரச்சாரம் செய்ய மேலும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது இந்த இடைத்தேர்தல் எல்லாம் கடந்த முறை வாங்கிய வாக்கு இந்த முறை சீமானுக்கு அதிகரிக்கலாம் காரணம் பிஜேபி அதிமுக போட்டியிடாதது. வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகமாவதை வைத்துக்கொண்டு 2026 தேர்தலை சீமான் கணித்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஏதும் இருக்கும் முடியாது. 2026 தேர்தல் சீமானுக்கு மட்டும் அல்ல பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தங்களை நிரூபித்துக் கொள்ள பயன்படும் தேர்தலாக அமையும் என்பதை யாரும் மறுக்க முடியாது. என்னதான் சீமான் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை குற்றச்சாட்டுகளை முன் வைத்தாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தான் முடிவு அமையும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஏனென்றால் மக்களின் மனநிலை அது.
விஜய் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார் 2026 தான் இலக்கு என்று அதனால் இடைத்தேர்தல் அவரது இலக்கு அல்ல. அதில் பயன்படுத்தப்படும் தேர்தல் யுக்திகளை பிரச்சார நுணுக்கங்களை விஜய் அவசியம் கண்காணிப்பார் என்பதில் ஐயமில்லை. அது 2026 தேர்தலில் பிரதிபலிக்கும். என்னதான் காரணம் சொன்னாலும் அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடாததை அந்த கட்சியில் உள்ள உறுப்பினர்கள் கூட ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இப்படி தொடர்ந்து பின்வாங்கிக் கொண்டே இருந்தால் கட்சி பின்வாங்கி போவதை தவிர வேறு வழியில்லை என்கின்றனர் அந்த தொண்டர்கள். எத்தனையோ இடைத்தேர்தல் மாடல்கள் இருந்தாலும் இந்த முறை நோட் அவுக்கு மாட்டார்கள் திமுகவினர் வேறு வழியில்லாமல் திமுகவுக்கு போட்டு தான் ஆக வேண்டும் அவர் கொடுக்கும் பிரியாணி சிக்கனாக இருந்தாலும் மட்டனாக இருந்தாலும் மக்கள் சாப்பிட்டே ஆக வேண்டும்.

– பா.ஜோதி நரசிம்மன்