வீட்டு வசதி திட்டங்களை நிறைவேற்றாமல்,கடந்த 15 ஆண்டு காலமாக…பறிதவிக்கும் புதுச்சேரி வீட்டு வசதி வாரியம்..!

புதுச்சேரி வீட்டு வசதி வாரியமானது கடந்த 1975 ஆம் ஆண்டு புதுச்சேரியில் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான முறையில் சோலை நகர், லாஸ்பேட்டை, அசோக் நகர், குருமாப்பேட்டை, பூமியம்பேட், ஜவகர் நகர், முதலியார் பேட்டை, ஜி.வி நகர் மற்றும் விடுதலை நகர் போன்ற திட்டப் பகுதிகளை நிறைவேற்றி சுமார் 2000த்துக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.! இந்தத் திட்டப் பகுதிகளை அன்றைய வாரிய செயலாளராக இருந்த  ஹேமச்சந்திரன் செய்து முடித்தார். அதன் பிறகு காரைக்கால் பகுதியில் கோவில் பத்து புளியங்கொட்டை சாலை போன்ற இடங்களிலும் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் வில்லியனூர், பத்மினி நகர், கணுவாப்பேட்டை, மூலகுளம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், முருங்கப்பாக்கம் போன்ற இடங்களில் புதிய மனை பிரிவுகளை உருவாக்கி பொதுமக்களுக்கு அப்ரூவ்டு மனைகளை குறைந்த விலைக்கு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2009-10 ஆம் ஆண்டு வாரியத்திற்கு வந்த சேர்மன் அங்காளன் விலிகி சரியான திட்டமிடல் இல்லாமலும் மக்கள் நலனை கருத்தில் கொல்லாமலும் செயல்பட்டதால் ஒட்டுமொத்த வாரிய நிர்வாகமும் அவரால் சீரழிந்து இன்று வரை எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாத  அளவிற்கு நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக வாரியத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மாத சம்பளம் கூட வழங்க முடியாத நிலை உள்ளது. வாரிய ஊழியர்கள் அனைவரும் முதல்வர், வீட்டு வசதி அமைச்சர் மற்றும் வாரிய சேர்மன் கேசவன் மிகிஷி ஆகியோர்களை பலமுறை சந்தித்து தங்கள் கஷ்டங்களை எடுத்துக் கூறி வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும் போதிய அளவிற்கு திட்டங்களை நிறைவேற்றி நிதி ஆதாரத்தை பெருக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டு காலமாக வீட்டு வசதி வாரியத்தில் பணி ஓய்வு பெற்ற பலர் இன்றுவரை அவர்களுக்கு சேர வேண்டிய ஓய்வு ஊதிய பணம் வழங்கப்படவில்லை. இதில் சில ஊழியர்கள் இறந்து விட்டனர். இறந்தும் கூட அவர்களது வீட்டாருக்கு இன்னும் பண பலன் கொடுக்கப்படாத நிலையே உள்ளது.. தற்போது வாரிய செயலாளராக “சிவராஜ் மீனா”என்பவரும் வாரியத் தலைவராக “கேசவன் மிகிஷி” என்பவரும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஒருங்கிணைந்து முழு அக்கறையுடன் சேர்ந்து பணியாற்றினால் வாரியத்தில் பிரச்சனைகள் தீரும் என பாதிக்கப்பட்ட வாரிய ஊழியர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் கடந்த ஆண்டு வாரியத்தின் இலக்கா அமைச்சராக திருமுருகன் பொறுப்பேற்றார். அப்போது வாரியத்தின் கோப்புகளை பார்வையிட்டு ஊழியர்களின் குறைகளை நேரில் கேட்ட பின்னர் விரைவில் முதல்வரிடம் ஆலோசித்து விட்டு  வீட்டு வசதி வாரியத்தை அவரது தந்தையார் “நளமகாராஜன்” வாரிய தலைவராக இருந்ததை சுட்டிக்காட்டி இந்த வாரியத்தில் நிலவும் நிதி பற்றாக்குறையை சரி செய்வேன் என உறுதி அளித்தார்.

பாக்ஸ் நியூஸ்:
புதுச்சேரி வீட்டு வசதி வாரியத்தை உடனடியாக மீட்டெடுக்க சில அவசரகால மற்றும் துணிச்சலான நடவடிக்கை தேவை என வாரிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர், அதாவது;

1. ஏற்கனவே அப்ரூவல் பெறப்பட்டபடி முருங்கப்பாக்கம் பகுதியில் ணிறிதி அலுவலகம் கட்ட இடம் கொடுக்கப்பட்டால் அதன் மூலம் வாரியத்திற்கு சுமார் ரூபாய் 8 கோடி உடனடியாக கிடைக்கும்.

2. சுதந்திர பொன் விழா நகரில் 12 மனைகள் திட்டமிட்டபடி ஏலம் விட்டால் அதன் மூலம் சுமார் ரூ. 10 கோடி ரூபாய் கிடைக்கும்.

3. வில்லியனூர் பத்மினி நகர் பகுதியில் (ஆஞ்சநேயர் கோவில் எதிரில்) மனைகள் விற்கப்பட்டால் சுமார் ரூபாய் 20 கோடி வருவாய் கிடைக்கும்.

– ஆனந்த் ஏழுமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *