கார்ப்பரேட் கம்பனிகள் தமிழ் சினிமாவில் தோற்பது ஏன்?

கார்ப்பரேட் கம்பனிகள் தமிழ் சினிமாவில் தோற்பது ஏன்?

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை குவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக சுமத்தப்பட்டு வருகிறது. அதிலும் முன்னணி கார்ப்பரேட் கம்பெனிகள் தயாரிக்கும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக தோல்வி கண்டு வருவதால் பல கார்ப்பரேட் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வணிக கதவை மூடி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக அறிமுகமான கார்ப்பரேட் நிறுவனங்களான யூ டிவி – ஈராஸ் இன்டர்நேஷனல் -பிரமிட் சாய் மீரா – மோசர் பியர்- ரிலையன்ஸ்- சஹாரா – போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள்  பட தயாரிப்பில் ஈடுபட்டு, சில படங்களிலேயே படுதோல்வியை சந்தித்தது.கடன் சுமை மற்றும் நிதி சிக்கல் காரணமாக தங்களது தயாரிப்பையும் நிறுத்திக் கொண்டன.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக அறிமுகமான லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் இதுவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கிறது.

15 திரைப்படங்களை விநியோகம் செய்திருக்கிறது. இதில் ‘சந்திரமுகி 2’, ‘லால் சலாம்’, ‘தர்பார்’, ‘காப்பான்’, ‘ராம் சேது’, ‘இந்தியன் 2’, ‘வேட்டையன்’, ‘விடா முயற்சி’ என ஏராளமான பொருட்செலவில் தயாரான திரைப்படங்கள் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெறாததால் கடுமையான நிதி சிக்கலில் மாட்டிக்கொண்டது.

லைக்கா நிறுவனம் தற்போது விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் தயாராகும் திரைப்படத்தை மட்டுமே தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் கூட ஜேசன் சஞ்சய் – படத் தயாரிப்பில் 90 சதவீத முதலீடு செய்திருப்பதால் இப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழ் திரைப்பட திரையில் தோல்வியை சந்திப்பதற்கு, முறையான திட்டமிடல் இன்மை – கதை தேர்வு விசயத்தில் கவனமின்மை- பிரம்மாண்டம் + நட்சத்திர நடிகர்கள் + கலைஞர்கள் கூட்டணி மீதான கண்மூடித்தனமான நம்பிக்கை.. என பல விசயங்களை பட்டியலிடுகிறார்கள் திரையுலக அனுபவஸ்தர்கள்.

ஆனால் யதார்த்தம் என்னவெனில் சிறிய முதலீடோஞ் பிரம்மாண்டமோ.. கதை ரசிகர்களை ஈர்க்கவேண்டும். கதை தான் ஹீரோ. கதை எளிமையானதாக இருந்தால் போதும். அதை நேர்த்தியானஞ் ரசிக்கும்படியானஞ் திரைக்கதையால் சொல்லிவிட்டால் போதும். ரசிகர்கள் அந்த படத்தை வெற்றிப்பெறவைத்துவிடுவார்கள். இதை தெரிந்துகொண்ட தயாரிப்பாளர்கள் வெற்றிப்பெறுகிறார்கள்.

–கே.வி.ஆர்.கோபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *