வாக்குறுதிகளை மறந்தார் …ஓட்டு போட்டவர்களை மறந்தார் …வெற்றிக்கு உழைத்தவர்களை மறந்தார் …அரூர் அதிமுக எம்எல்ஏ நிலவரம்!

பொது வாழ்க்கையில சிலருக்கு ஏற்படும் திடீர் விபத்துகள் வாழ்க்கையை அப்படியே மாற்றி அமைத்துவிடும் அப்படி ஒரு விபத்தால் வாழ்க்கையில் பெரிய ஏமாற்றத்தை பார்த்தவர் பொய்யப்பட்டி சம்பத்குமார், விபத்தை ஏற்படுத்தியவர் தருமபுரி மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலக்கோடு கே.பிஅன்பழகன்!
2018ல் நடந்த இடைத் தேர்தலில் நரிப்பள்ளி கம்யூட்டர் வாத்தியார் சம்பத்குமார், அதிமுக வேட்பாளரானார் ஒன்றிய செயலாளர் புள்ளியப்பன் சிஷ்யன் மற்றும் டிரைவர், பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி எம்எல்ஏவுடன் கூட்டணி அமைத்துக்கொண்ட சம்பத்குமார் ஆரம்பம் முதற்கொண்டே பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்வதில் கவனமாக இருந்தார். அது வேண்டும் இது வேண்டும் என்று நிறைய கோரிக்கைகளை வைத்து பணம் பண்ண ஆரம்பித்தார். அரூர் நகரம் நகர்தை ஒட்டி பதினைந்திற்கும் மேற்பட்ட வீட்டுமனைகளை வாங்கி போட்டிருக்கிறர்ர என்று சொல்லும் அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர், நரிப்பள்ளி, மந்தி குளம்பட்டி, சிட்லிங் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிலங்களை வாங்கி போட்டிருக்கிறார். இந்த விஷயத்தில சம்பத்குமார் மச்சான் பணி அளப்பரியது என்கிறார். அடுத்த 2021லும் வாய்ப்பு கிடைக்க தாராளமாக வாழ்ந்து பார்க்க ஆரம்பித்தார். அதற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அதிமுக நிர்வாகிகளை மட்டும் தன்வசம் வைத்துக்கொண்டார். 
அரூர் நகர செயலாளர் ஏ.ஆர்.எஸ்.பாபு சம்பத்குமார் பணத்தில ரியல் எஸ்டேட் பண்றவர் இவருடைய ஜவுளி கடையில சம்பத்குமாருக்கு தனி மீட்டிங் ரூம் இருக்கு.
மொரப்பூர் அதிமுக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் நிலத்துக்கு பக்கத்தில இருபத்தி ஐந்து ஏக்கர் பம்புசெட்டோட வாங்கி போட்டிருக்கிறார் அது தெரியுமா? அதையும் கொஞ்சம் விசாரிச்சி எழுதுங்க கடந்தமுறை எம்எல்ஏ சீட் கேட்டு ஏமாந்தவர்களில் ஒருவர், தொகுதியில நல்லது கெட்டது நடந்தா வரமாட்டார் தவறுதலாய் வந்தால் வெறுங்கையை வீசிகிட்டுதான் வருவார். ஆனால் மாவட்ட செயலாளர் அன்பழகன் அப்படி இல்லை. தகவல் தெரிந்தால் வந்துவிடுவார் பத்தாயிரம் இருபதாயிரம் கொடுக்கச்சொல்லி கொடுப்பார் சம்பத்குமாரும், ஒன்றியம் பசுபதியும் அதில பாதி பணத்தை ஒதுக்கிட்டு மீதி பணத்தைதான் கொடுப்பாங்க அவ்வளவு நல்லவங்க இந்த விஷயம் கே.பி.அன்பழகன் வரை அரூர் அதிமுகவினர் மூலம் புகராகி இருக்கு.
கட்சி நிகழ்ச்சிகளுக்கு பந்தல் மைக்செட், பேப்பர் விளம்பரம், பேனர் போடறவங்க வரை கடன்தான் கொஞ்ச நாளில் அந்த கடன் வராகடன் ஆகிவிடும். அப்படியே உள்ளூர்ல இருக்கற ஓட்டல்களிலும் கடன் உதாரணத்திற்கு சரவணாஸ் ஓட்டலை சொல்லலாம். இப்டிப சம்பத்குமாரும் பசுபதியும் விபூதி அடிக்காத ஏரியாவே இல்லை என்கின்றனர். அரூர் டவுனில் நம்மிடம் பேசிய அதிமுகவினர்.
தொட்டப்பட்டி சிவன், பேக்கரி பழனிச்சாமி, இவர்கள் இருவரும் முக்கிய பினாமிகள், அரூர் டவுன் திருவிக நகரில் போஸ்ட் ஆபீஸ் எதிரில் உள்ள ஒரு வீட்டில்தான் கடந்த சில வருடங்களாக சம்பத்குமாரும பசுபதியும் முக்கிய நிர்வாகிகளுடன் ஓய்வு எடுக்கின்றனர். தேர்தல் நேரத்தில், மூன்றுகோடி பிடிபட்ட விவகாரத்தில், பணம் கொடுத்து தப்பிச்சாங்க இந்த விவகாரம் ஊரே நாறிப்போச்சி! கமிஷனை பொறுத்தவரை இருபது சதவிதம்தான் அதுக்கு கம்மி கிடையாது அப்புறம் கமிஷன் கொடுத்தாலும் அதிமுககாரனுக்கு வேலை கிடையாது. உதவிகள் கேட்பார்கள் என்பதால் அதிமுகவினரை சந்திப்பதையே தவிர்த்துவிடும் சம்பத்குமார், எதிர்கட்சி எம்எல்ஏ என்னால என்ன பண்ணமுடியும்னு ஒரு காரணத்தை சொல்லிவிடுவார்.
கம்பைநல்லூர், (அரூர் இப்ப நகராட்சியாக தரம் உயர்ந்துவிட்டது) இரண்டு பேரூராட்சிகளில் இருந்தும் தவறாமல் கமிஷன் வந்துவிடும். ஓட்டு போட்ட மக்களுக்கும் சம்பத்குமாருக்கும் கடுகளவும் சம்பந்தமில்லாமல் ஆகிவிட்டது தேர்தல் வாக்குறுதிகள், தன்னுடைய வெற்றிக்கு உழைத்த அதிமுகவினர் எல்லோரையும் மறந்துவிட்டார். கோட்டப்பட்டி பழைப்பட்டி அரூரில் சம்பத்குமார் எம்எல்ஏ குடியிருந்த கதை ரொம்ப பெருசு என்கின்றார் ஒரு திமுக பிரமுகர் அதிமுக எம்எல்ஏவே தவிர ஆளுங்கட்சியை பகைத்துக்கொள்வதில்லை இணக்கமாக போகிறார் எல்லாமும் நடக்குது. தான் மட்டும் நல்லாவே வாழ்ந்துகொண்டிருக்கிறார் சம்பத்குமார் ஆனால் தொகுதியிலும் அதிமுகவினர் மத்தியிலும் பேரு கெட்டுப்போச்சி தேர்தல் வரட்டும் வச்சிக்கிறோம் கச்சேரியை என்று அதிமுகவினர் கோபத்தில் மீசையை முறுக்குகின்றனர்.
கம்பைநல்லூர் நகர செயலாளர் தனபால், ஈட்டியம்பட்டி கண்ணகி மாரியப்பன், பழையபட்டி தனலட்சுமி கோபி உள்ளிட்டவர்கள் அடுத்து எம்எல்ஏ சீட்டு எனக்குத்தான் என்று அரூர் தொகுதிக்குள் ஆரவாரமாய் வலம் வருகின்றனர். சம்பத்குமார் யாருக்கும் விசுவாசமாய் இல்லை. தான் மட்டுமே சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பாவம் அரூர் தொகுதி மக்கள்.
– ஆலவாயர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *