Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கட்சிக்கு துரோகம் … உள்ளடி வேலை பார்த்தவருக்கு, மாவட்ட பொறுப்பாளர் பதவி… குமுறும் தருமபுரி திமுக தொண்டர்கள்…?

நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ இன்பசேகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாமக கௌரவ தலைவர் நி.ரி.மணி போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஜிகே மணி வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தலில் இன்பசேகரன் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. கூட்டணி பலம், ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை, மற்றும் தமிழகம் முழுவதும் திமுக ஆதரவு அலை வீசியது.

அதே நேரம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த அன்பழகனுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சியான பாமகவுக்கு சீட்டு ஒதுக்கப்பட்டது. அதில் ஜிகே மணி போட்டியிட்டார். இதனால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதன் காரணமாக இன்பசேகரன், சுமார் ஒரு லட்சம் வாக்குகள் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்பசேகரன் அந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

காரணம் – திமுகவைச் சேர்ந்தவர்களே உள்ளடி வேலை செய்ததுதான்.

இன்பசேகரனின் தந்தை பெரியண்ணனுடன், பாமகவில் இருந்து திமுகவில் இணைந்தவர் கராத்தே தர்மன் என்கிற தர்மசெல்வன். பெரியண்ணன் மறைந்த பிறகு, இன்பசேகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தணிந்து செயல்பட்டு வந்தார். இன்பசேகரனை எல்லாவிதத்திலும் பெயரை கெடுக்கவேண்டும் என்பதே அவரது முழுநேரப் பணியாக இருந்தது.

2021 சட்டமன்ற தேர்தலில், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட இன்பசேகரனும் தர்மசெல்வனும் விருப்ப மனு வழங்கினர். இதில், இன்பசேகரனுக்கு போட்டியிட திமுக வாய்ப்பு அளித்தது. ஆனால், இன்பசேகரன் வெற்றி பெற்றால், தான் அரசியலில் வளர முடியாது என எண்ணிய தர்மசெல்வன், ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்வதற்குப் பதிலாக உள்ளடி வேலைகளில் இறங்கினார்.

பாமக வேட்பாளர் ஜிகே மணியுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு, திமுகவினரை பாமகவிற்கு வாக்களிக்கும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். மேலும், பெரியண்ணனும், தர்மசெல்வனும், பாமகவில் இருந்து திமுகவில் இணைந்தபோது, இவர்களுடன் திமுகவில் இணைந்த நபர்களை சந்தித்து, இன்பசேகரன் வளர்ச்சி அடையக்கூடாது என தீர்மானித்தனர்.

தேர்தலுக்கு முந்தைய நாள், அன்றைய அதிமுக அமைச்சரான கே.பி.அன்பழகன், பெரிய தொகையை பெற்று, மாவட்டம் முழுவதும் அதிதியாளர்களுக்கு பணம் விநியோகம் செய்து, திமுகவிற்கு எதிராக வாக்களிக்க ஏற்பாடு செய்தார். அதேபோல், ஜிகே மணியிடம் இருந்து ஒரு பெரும் தொகையை பெற்று, அதில் ஒரு பகுதியை தனது ஆதரவாளர்களுக்கு கொடுத்து பாமகவிற்கு வேலை செய்ய வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ளடி வேலைகள் நடத்தப்பட்டதால், திமுக தோல்வியைத் தழுவியது. இன்பசேகரனும் தோல்வியடைந்தார். தமிழகமெங்கும் வெற்றி கண்ட திமுக, தர்மபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்தது. கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி மோதல்களும், உள்ளடி வேலைகளும் இதற்கு காரணமாகின.

இத்தகைய திமுக துரோகங்களுக்கு முன்நின்று பிரதானமாக செயல்பட்டவர், தற்போது மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தர்மசெல்வன்தான்.

பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் அல்லது தர்மபுரி மாவட்ட அளவிலும் எந்தவித செல்வாக்கும் இல்லாத தர்மசெல்வன், மாநில அளவில் திமுக பொறுப்பாளர்களையும், அமைச்சர்களையும் அடிக்கடி சந்தித்து, அவர்களின் நட்பைப் பெற்றார். அதன் பலனாகவே தற்போது மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால், இவருக்கு அந்த பதவி கிடைத்தது கட்சித் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை யாருக்கும் விருப்பமில்லை. உண்மையில், தர்மசெல்வன் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருப்பதை விட, ரவுடி கும்பலுக்கு தலைவனாக இருப்பதே சரியாக இருக்கும். கல்குவாரி செய்து வருகிறார். அங்கே பணியாற்றும் வெளிமாநில பணியாளர்களைக் கொண்டு ரவுடிசம் செய்வது இவரது பிரதான தொழிலாக உள்ளது.

ஏற்கனவே திமுக மீது “அராஜகம்” என்ற புகார் உள்ள நிலையில், தற்போது திமுக மாவட்ட பொறுப்பாளரே ஒரு ரவுடி கும்பலுக்கு தலைவர் என்ற நிலை, கட்சிக்கு மேலும் அவப்பெயரை ஏற்படுத்தும். கட்சித் தொண்டர்களை மட்டுமல்ல, பத்திரிகையாளர்களையும் மதிக்காமல், ஒருமையில் பேசும் தன்மை கொண்ட இவர், எப்படி ஒரு மாவட்டத்தை வழிநடத்தப் போகிறார் என்பது “மில்லியன் டாலர் கேள்வி” ஆக உள்ளது.


கழக துரோகிகள் ஒன்றாக இணைந்த தருணம்!!

இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மசெல்வனுக்கு பதவி வாங்கிக் கொடுத்ததில் முக்கிய பங்காற்றியவர், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.செந்தில்குமார் என்பதும் தகவல்.

அது உண்மையானால், செந்தில்குமார் அவர்களுக்கான கழகத் தொண்டர்களின் சில கேள்விகள்:

  1. உங்களுக்கு தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக, 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற நான்கு நாட்கள் இருக்கும் போது, “தர்மபுரியில் திமுக வெல்வது கடினம்” என்று விகடனில் பேட்டி கொடுத்து, சுறுசுறுப்பாக வேலை செய்த தொண்டர்களை சோர்வு அடையச் செய்தீர்களே! மறந்து விட்டீர்களா?
  2. நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த 5 ஆண்டுகளில், இணையத்தில் நீங்கள் செய்த அரசியலைத் தவிர, களத்தில் நீங்கள் செய்த பணி என்ன?
  3. தேர்தலில் வெற்றி-தோல்வியைத் தாண்டி, மக்கள் செல்வாக்கு என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
  4. நம்முடைய மாவட்டத்திற்கு முதல்வர் வருகை தந்தபோது, சாலையில் நின்று அவருக்கு வரவேற்பு அளித்ததுண்டா?
  5. அரசியல் களப்பணி, தேர்தல் களப்பணி என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
  6. உங்களை இன்று வரை ஒரு சாதாரண தொண்டர் சந்தித்து பேச முடியுமா?
  7. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் அண்ணன் திரு.றிழிறி அவர்களை தோற்கடிக்க திட்டமிட்டு, பாமகவிற்கு வேலை செய்த தர்மசெல்வனும், 2024 மக்களவைத் தேர்தலின் போது “திமுக வெற்றி பெறுவது சந்தேகம்” என்று பேட்டி கொடுத்த நீங்களும் கழகத்தின் எதிரிகள் தானே?
  8. தொடர்ச்சியாக சர்ச்சைக்கு பெயர் பெற்ற நீங்கள், நிகழ்கால அரசியலில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. நீங்கள் செய்த செயலுக்கு காலம் கண்டிப்பாக பதில் கூறும்.

கெடுவான் கேடு நினைப்பான், கெட்டாலும் மேன்மக்கள் – மேன்மக்களே!

– ஏரியூர் தங்கம்