நாமக்கல்- அதிமுக நகரச் செயலாளர்-யை கண்டித்து, திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்… பத்து பேரை கூட காணோம்…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியை கண்டித்தும் நகர செயலாளர சங்கரை கண்டித்தும் அதிமுக நடத்திய அதே இடத்தில் திமுகவினர் நடத்திய கேலிக்கூத்து ஆர்ப்பாட்டம்..
அதே இடம் அதே நேரம் அதிமுக ஸ்s திமுக கேலிக்கூத்து…

 4 1/2 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள 10 பேர் கூட இல்லையா கேலி கூத்தான ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த 10 பேருக்காக சாலையை மறைத்து நின்ற திமுக நிர்வாகிகள்.
 ராசிபுரத்தில் திமுக, அதிமுகவினர் இடையே நடக்கும் போட்டா போட்டி ஆர்ப்பாட்டங்கள் ..

 திமுக  நடத்திய ஆர்ப்பாட்ட பேனரில் ஏ1 குற்றவாளி ஜெயலலிதா எனவும் ஏ2 குற்றவாளி சசிகலா எனவும் படம் பொறிக்கப்பட்டிருந்தது கண்டனத்திற்குரியது என அதிமுகவினர் வேதனை .

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி சீர்கேட்டை கண்டித்தும் , ராசிபுரம் நகர செயலாளர் என் ஆர் சங்கரை கண்டித்தும் , நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே ஆர் என் ராஜேஷ்குமாரை கண்டித்தும் , ராசிபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் புதிய பஸ் நிலையம் மாற்றம் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் , அதிமுக சார்பில் நேற்று மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கிய நிலையில், அதிமுக நகர செயலாளர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ததாக கூறி , திமுக நகரச் செயலாளர் என் ஆர் சங்கர் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் குமாரை எச்சரித்தார் .

மேலும் நீங்கள் புதிய பஸ் நிலையத்தை கட்டினாலும், கிராமங்களை நகராட்சியோடு இணைத்தாலும், அதிமுக ஆட்சி 2026 இல் அமைந்த உடன்  அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பழையபடியே மாற்றப் படும்  என உறுதி அளித்தார்.

இதனால் கொந்தளித்துப் போன ராசிபுரம் திமுக நகரச் செயலாளர் என் ஆர் சங்கர்  போட்டா போட்டி ஆர்ப்பாட்டத்தை இன்று அறிவித்தார் .

 அதாவது ராசிபுரம் அதிமுக நகர செயலாளர் அதிமுக ஆட்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும், அதில் ஏழை மக்களை ஏமாற்றி நிலம் தராமல் மோசடி செய்ததாக கூறி , ஏழை மக்களுக்கு நிலத்தை வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவித்தார் .

 27 வார்டுகள் உள்ள ராசிபுரம் நகராட்சியில் இருந்து , போராட்டத்தில் கலந்துகொள்ள வார்டுக்கு பத்து பேர் கூட வரவில்லை என்பதுதான் கொடுமை..

 அப்படி இருந்தும் மேடையில்  அதிமுக நகர செயலாளர் கண்டித்து  ராசிபுரம் திமுக நகர செயலாளர் என் ஆர் சங்கர் மற்றும் , அவரின் மனைவியான ராசிபுரம் நகர மன்ற தலைவர் கவிதா சங்கர் உட்பட  நிர்வாகிகள் மேடையில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது கேலிக்கூத்தாக இருந்தது .

 திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அலை கடலென மக்கள் திரள்வார்கள் என்று போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் , 10 பேர் கூட கீழே இல்லை என்பதை கண்ட மக்கள் வேலையில்லாதவன் எதற்கு எதையோ பிடுங்குவான் என்ற கதை போல இருக்கிறது என சொல்லிக்கொண்டு சென்றனர் .

 ராசிபுரம் நகராட்சியில் அதிமுகவும் திமுகவும், மாறி மாறி போட்டோ போட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதையும் , பொதுமக்களுக்கு இடையூறு விளைவைக்கும் போக்குவரத்து நெரிசலை உண்டாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

  • கௌரிசங்கர்