கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி பின்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர் சிகிச்சைக்காக வந்த நிலையில் மருத்துவர் தாமதமாக வந்தது தொடர்பாக அந்த சிறுவனின் பெற்றோர் கேள்வி எழுப்பியதற்கு
ரெண்டு மணி நேரம் ளிறி பார்த்துவிட்டு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கிளம்பி போற டாக்டரும் இருக்காங்க… மூடிக்கிட்டு இருங்க என மருத்துவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது
“என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் கடவுள் என்ன செய்யணுமோ அதை செய்வார்..” என சாபம் விடும் வகையில் அவர் பேசியிருந்தார்..
அந்த மருத்துவர் கூறியதில் 2 மணி நேரம் ளிறி பார்த்துவிட்டு அரசியல் செல்வாக்கோடு கிளம்பி போற மருத்துவர்களும் இங்கே இருக்காங்க என்று கூறியிருந்தார், இந்த நிலையில் நமது நிருபர் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் என்னதான் நடக்கிறது? என்று கள ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டுமல்ல, கடலூர் மாவட்டம் முழுவதும் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளோம்.
அந்த வைரல் வீடியோவில் பண்ருட்டி அரசு மருத்துவர்” அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இரண்டு மணி நேரம் வேலை பார்த்துவிட்டு செல்லும் மருத்துவர்களும் எங்கு இருக்கிறார்கள் என்று கூறும் வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
பண்ருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் உரிய நேரத்திற்கு வரவில்லை என்று தெளிவாக தெரிந்தாலும், மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையான கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது,இதனால் இருதயம் மற்றும் நரம்பு சம்பந்தமான சிகிச்சைகளுக்கு சிகிச்சை அளிக்காமல் ஸிணிதிணிஸி செய்யப்படும் மருத்துவமனையாகவே இந்த அரசு தலைமை மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய கடலூர் இரயில் விபத்தில் காயமடைந்து வந்த மாணவர் ஒருவர், சிறிது நேரத்திலேயே போதிய உபகரணங்கள் இல்லை என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சில மணி நேரங்களில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிர் இழந்தார்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சுகாதார துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கேட்கும் போதெல்லாம் அதிமுக ஆட்சியில் காலி பணியிடங்களை நிரப்பவில்லை என கடந்த நான்குரை ஆண்டுகளாக கூறிவருகிறார்.
மனித உயிர்களை காக்கும் மகத்தான சேவையில் ஈடுபட்டு வரும் மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், தாலுக்கா மருத்துவமனை, தேசிய தரச் சான்று பெற்ற கடலூர் அரசு தலைமை மருத்துவமனை என இவைகளில் உள்ள முறைகேடுகளை சரி செய்து பொதுமக்களுக்கு தரமான மருத்துவம் வழங்க சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் தரமான சிகிச்சையும், போதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களும் பணியமரத்தி மருத்துவ சேவையை சிறப்பாக செய்ய வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளித்தால் விலைமதிப்பற்ற பல உயிர்களை காப்பாற்ற முடியும்…
- முருகன் லட்சுமணன்