ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நான்கு நாட்கள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் , பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, விவேகானந்தர் நினைவு மண்டபத்திலும் தரிசனம் செய்ய உள்ளார்.
மோகன் பகவத் வருகையால் கன்னியாகுமரி பகுதியில் காவல்துறை கண் காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- த.இ.தாகூர்