காஞ்சிபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் உடல் உபாதைகளை கழிக்கும் வகையில் உள்ள கழிப்பறைகள் சுத்தம் இல்லாமலும் தண்ணீர் வராததாலும் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க அலுவலக ஊழியர்களுக்கு என தனி கழிப்பிடை கழிப்பறை உள்ளது அதில் அதைவிட மோசமான நிலையிலும் ஒரு நபரின் உள்ளாடை அங்கு கிடைக்கிறது நாள்தோறும் தங்கள் பிரச்சனைக்காக வந்து செல்லும் அரசு அலுவலகத்தில் இதை போல் செயல்பாடுகள் இருந்தால்பொதுமக்கள் மூஞ்சியை சுழித்து கொண்டுதான் செல்கின்றனர்.
என் தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட போது நம்மிடம் தொலைபேசியில் பேசியவர்உடனே என்ன செய்ய வேண்டும் என்று செய்து சுத்தம் செய்து விடுவதாக நம்மிடம் தொலைபேசியில் தெரிவித்து இருந்தார் இது நடக்குமா இவ்வளவு மாதங்கள் இப்படி சுத்தம் செய்யாமல் நிலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் இனியாவது சுத்தம் செய்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இருக்குமா? இல்லை மீண்டும் அதே நிலை தள்ளப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியம் நம்மிடம் பேசும் பொழுது
நான் இங்கு பலரின் கோரிக்கை மனுக்களை கொண்டு வந்து பல சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலருக்கு பயன்பெறும் வகையில் நடந்துள்ளேன். கழிவறை பிரச்சனை குறித்து நான் பலமுறை அவர்களிடம் தெரிவித்த பொழுது அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவரை நம்மிடம் தெரிவித்து இருந்தார்.
- பா.மணிகண்டன்