திருப்பூர்… புதிய மாவட்ட தலைவர் பொறுப்புக்கு கடும் போட்டி.. காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு!

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர் பொறுப்புக்கு கடும் போட்டி நிலவுகிறது திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி இன்னும் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

பூத் கமிட்டி பணிகள் நிறைவு பெற்ற கிராம நிர்வாக கமிட்டி சீரமைப்பு பணிகள் இறுதிக்கட்டம் முடிவடைந்துள்ள நிலையில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை முடிவு செய்து பட்டியலை தயார் செய்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை வழங்கி ஆலோசனை நடத்திவிட்டு சென்னை திரும்பி நிலையில் இந்த பட்டியலை டெல்லி மேலிடம் பரிசீலித்து விரைவில் நியமனம் அறிவிப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் மாவட்டத் தலைவர் பொறுப்பை பெற்று விட வேண்டும் என்று காங்கிரஸ் திறப்பில் இரு தரப்பினரும் பல்வேறு விவரங்கள் அமைத்து கட்சி மேல் இடங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மோதல்கள் கைகலப்பு உள்ளிட்டவைகள் ஏற்பட்டு வரும் சூழலில் கட்சியின் தலைமை அழைத்து இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அதேபோல் இரு தரப்பினரும் ஒருவர் மேல் ஒருவர் மாறி மாறி தங்களது தலைமைக்கு புகார் மனு வழங்கி வந்ததாக கூறப்படும் நிலையில் தற்பொழுது மாவட்ட தலைவர் கோபி பழனி அப்பன் பொறுப்பில் இருந்து மாற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனிடையே கரைப்புதூர் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் என்பவருக்கு எதிர்பாராத நேரத்தில் பல்லடம் சட்டமன்ற பொறுப்பாளராக பதவி வழங்கப்பட்ட நிலையில் தற்போது திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பதவியை பிடிக்க கடுமையான போட்டி நிலவி வருகிறது. இன்னும் சில தினங்களில் மாவட்ட தலைவர் பதவி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் வட்டாரத்தில் சூடு பிடித்துள்ளது.

  • அபிஷேக் சுரேஷ்