நம்முடைய வாழ்வில் 108 என்ற எண்ணைப் பற்றி அடிக்கடி கேட்டிருப்போம். 108 தேங்காய் உடை, 108 தோப்புக்கரணம் போடு இப்படியெல்லாம் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. லக்கி நம்பர் என்று சொன்னால் 777 சொல்லுவாங்க. பேய்களுக்கான நம்பர் எதுன்னு கேட்டால் 666 என்று சொல்வார்கள். அதை போல 108 க்கு பின்னால் என்ன அதிசயம் ஒளிந்திருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சை விடுகின்றான். ஒரு மணி நேரத்திற்கு 60ஜ்15 என்ற கணக்கில் பார்த்தால் 900 முறையாகும். இதுவே ஒருநாளைக்கு இந்த கணக்கை போட்டால் 15ஜ்60ஜ்24 என்னும் போது 21,600 முறை என்று வருகிறது. இந்த கணக்கை இரவு பகல் என்று பிரித்து பார்த்தால் 10,800 முறை வருகிறது.
அசல்பதிவேற்றியவருக்கு நன்றி.
பூமிக்கும் நிலவுக்குமான தூரம் நிலவின் விட்டத்தில் 108 மடங்கு கூடுதலாகும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தூரம் சூரியனின் விட்டத்தை விட 108 மடங்கு கூடுதலாகும்.
திவ்யதேசம் …
108 என்னும் எண் புத்த மதத்தில், ஹிந்து மதத்தில் புனிதமாக கருதப்படும் எண்ணாகும். வைணவர்களுக்கும் புனிதமாக 108 கருதப்படுகிறது. விஷ்ணுவின் 108 திவ்யதேசம் என்று கூறுவார்கள். 108 விஷ்ணுவின் கோவில்களை உள்ளடக்கியதாகும். மொத்தம் இருக்கும் நான்கு திசைகளிலும் 27 நட்சத்திர கூட்டம் உள்ளது. இங்கேயும் 108 என்பது வருகிறது. 12 ராசிகள் 9 கோள்களை சேர்க்கும் போதும் 108 எண் வருகிறது.வேதசத்சங்கம்.
நம் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் தாங்கக்கூடிய அளவானது 108குதி ஆகும். அதற்கு பிறகு வரும் ஒவ்வொரு ஃபேரன்ஹீட்க்கும் நம் உடலில் உள்ள செல்கள் இறந்துவிடுமாம்.
பரதநாட்டியத்தில் உள்ள கரணங்களின் எண்ணிக்கை 108 ஆகும். ஒவ்வொரு செய்கை என்று சொல்வார்கள் அதுவும் மொத்தம் 108 உள்ளது என்பது ஆச்சர்யமாக உள்ளது. நம்முடைய கோவில்களில் உள்ள சிற்பங்களில் இதை காணலாம். நான்கு வேதங்களில் உள்ள உபநிஷதங்களும் 108 ஆகும். ரிக் வேதத்தில் 10, யஜூர் வேதத்தில் 51, சாம வேதத்தில் 16, அதர்வண வேதத்தில் 31 என்று மொத்தம் 108 உள்ளது.
நம் உடலில் உள்ள பிரஷர் பாயின்ட் 108 உள்ளது. சீக்கிய மதத்திலேயும், சீன புத்த மதத்திலேயும் உள்ள ஜபமாலைகளில் 108 முத்துக்களே இருக்கும். திபெத்திய புத்த மதத்தில் பாவங்களின் எண்ணிக்கை 108 உள்ளதாக சொல்லப்படுகிறது. புத்தர்கள் முக்தி அடைவதற்கு 108 படிகளை தாண்டி செல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஜப்பானில் ஷிண்டே சமயத்தில் புத்தாண்டு கொண்டாடப்படும் போது 108 முறை மணியை அடிப்பார்கள். இதனால் மனிதர்களின் பாவம் போகிறது என்று நம்பப்படுகிறது.
முக்திநாத் என்னும் இடத்தில் 108 நீரூற்றுகள் இருக்கின்றன. உத்திரகாண்டில் 108 சிவசன்னதிகள் இருக்கின்றன. கடைசியாக, நாம் அவசரகாலத்தில் கூப்பிடும் ஆம்புலன்ஸ் எண்ணும் 108 என்பதாகும்.
இந்த 108 என்னும் எண் ஆன்மீகத்தில் மட்டுமில்லாமல், அறிவியல், கணிதம் என்று எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் பெற்று இருப்பதை காணலாம். இது தற்செயலாக அமைந்துள்ளதா இல்லை ஏதோ பிரபஞ்ச ரகசியத்தை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறதா என்பது புலப்படவில்லை என்றாலும் ஆச்சர்யமாகவேயுள்ளது
- மதுரை மணிகண்டன்