ஏழு மாவட்டங்கள் நாற்பத்தியோரு தொகுதிகள் நான்தான் மண்டல செயலாளர் இரண்டு தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகள் நிச்சய வெற்றினு எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கு. அதில ஒரு தொகுதி போளூர், இன்னொரு தொகுதி எதுன்னு நான் சொல்ல விரும்பல..
போளூர் தொகுதியில ஏகப்பட்ட பாஸ் (தலைவர்கள்) போனமுறை கே.வி.சேகரனுக்கு தராதீங்கன்னு சொன்னீங்களே யாருக்கு தரணும்னு சொன்னீங்களா…? சிறப்பா வேலை பார்த்துட்டீங்க, வேட்பாளரை தலைமை முடிவு பண்ணும். 41 தொகுதிகளையும் திமுகவை ஜெயிக்க வைக்கறதுதான் என் வேலை, இன்னும் சொல்லப்போனா எனக்கு சீட்டையே தலைமைதான் முடிவு பண்ணும்.
அக்கறையோட தேர்தல் வேலையை பாருங்க. அதை விட்டுட்டு டாக்டருக்கு கொடுங்க. கம்பனுக்கு கொடுங்கனு சொல்லாதீங்க என்று போளூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழுவிடம் வருத்தப்பட்டு ஆதங்கத்தோடு பேசி இருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.
ஆனாலும் தேர்தல் பணிக்குழுவினர் டாக்டர் கம்பனுக்கு சீட் கொடுங்க என்று கேட்பதிலேயே குறியாக இருந்தனர்.
ஆரணி எம்பியும், வடக்கு மாவட்ட செயலாளருமான தரணிவேந்தன், 41 தொகுதியில 40 தொகுதிக்கு வேட்பாளர்களை நீங்க முடிவு பண்ணுங்க போளூர் தொகுதிக்கு மட்டும் எங்க விருப்பப்படி டாக்டர் கம்பனுக்கு சீட் கொடுங்க என்று கோரிக்கையை ஆரம்பித்து வைக்க, அவரை தொடர்ந்து அத்துவாம்பாடி காசி, போளூர் நகர செயலாளர் தனசேகரன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாபு உள்ளிட்டவர்கள் தரணிவேந்தன் கோரிக்கையை உயர்த்தி பிடித்தனர்.
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவின் பங்களாவில் பதின்மூன்று பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவினர் மத்தியில் நடந்த உரையாடல்தான் மேற்படி!
போளூர் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் கம்பனுக்குத்தான் சீட்டு என்று திமுகவினர் மத்தியில் பேசப்பட்டாலும், கடந்தமுறை கலசபாக்கம் தொகுதி எதிர்பார்த்து ஏமாற்றத்தில் முடிந்தது. அதைப்போல இந்தமுறையும் ஆகிவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கைதான் திமுகவினர் கோரிக்கை போல…, ஆனால் டாக்டர் கம்பன் இதைப்பற்றி கடுகளவும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை டாக்டர் கம்பனுக்கு வாய்ப்பு இல்லாவிட்டால் எங்களை ஒரு குரூப்பே கியூவுல நிற்குது.
போளூர் தொகுதி ஒன்றிய செயலாளர் கே.வி.சேகரன் இந்த ஒருமுறை எனக்கு வாய்ப்பு கொடுத்தா பரவாயில்லை என்கிற முகபாவனையோடு நிற்கிறார். வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ்குமார் மாவட்ட சேர்மன் பதவியை அடைய அமைச்சர் ராஜகண்ணப்பன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்வரை முயற்சி செய்தார். முடியல சின்னவரு எனக்குதான் சீட்டு, போய் வேலையை பாருன்னு சொல்லிட்டாரு என்று நம்பிக்கையோட காத்திருக்கிறார். விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.கே.பாபுவும் கியூவுல நிற்கிறார். சேத்பட் நகர செயலாளர் முருகன் இவருடைய துணைவியார் சுதா பேரூராட்சி தலைவர், அமைச்சர் எ.வ.வேலு மாவட்டம் தரணிவேந்தன் ரூட்ல எம்எல்ஏ சீட்டுக்கு வெளிப்படையாகவே தூண்டில் போட்டிருக்கிறார். அடுத்தவர் பெரணம்பாக்கம் மணிகண்டன் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் பெரிய கான்ட்ராக்டர் நல்லாவே சம்பாதிக்கிறார். நிறையவே செலவு செய்கிறார் போளூர் தொகுதியில் அனைத்து தரப்பினர் மத்தியிலும் முக்கியத்துவம் கொடுத்து பேசப்படும் நபராக இருக்கும் மணிகண்டன் அமைச்சர் எ.வ.வேலு தரணிவேந்தன் டாக்டர் கம்பன் மூவருக்கும் முறைவாசல் அர்ச்சனை செய்கிறார் இவர் நம்பிக்கையோடு இருக்கிறார். இவரை மாதிரி நம்பிக்கையோடு இருக்கும் திமுகவினர் எண்ணிக்கை அதிகம்!
நம்முடைய பார்வையில் யாராக இருந்தாலும் புதியவர் எளிய மனிதருக்கு வாய்ப்பு தரலாம் இவர்களில் அவர் இருக்கலாம்.
- ஆலவாயர்