உசிலம்பட்டி நகராட்சியின் பிளாஸ்டிக் கழிவுகள் சேமிப்பு கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின் மயானம் அருகில் நகராட்சிக்கு சொந்தமான நூண்ணுரம் சையலாக்க மையம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில், தேங்கும் குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை
இந்த மையத்தில் உள்ள இரு கட்டிடங்களில் சேமித்து
வைத்து மறு
சுழற்சிக்காக, அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த பிளாஸ்டிக் கழிவுகள் சேமித்து வைத்திருந்த கிட்டங்கியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை
வான் அளவு சென்றது.
இந்த பயங்கர தீவிபத்து குறித்து, அறிந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை, டி.கல்லுப்பட்டி தீயணைப்புறை வீரர்கள் விரைந்து
வந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த கிட்டங்கி பகுதியில் நகராட்சி ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாததால், உயிர் சேதம் ஏதும் ஏற்
படவில்லை, தொடர்ந்து எரிந்து வரும் தீயினால், உசிலம்பட்டி நகர் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது.
– நா.ரவிச்சந்திரன்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply