தீபாவளி பண்டிகை நெருங்கும் வேலையில் – உசிலம்
பட்டியில், 3 அம்ச கோரிக்கைகளை ,
வலியுறுத்தி ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போதுமான ஊதியமின்மை, அபராத தொகையை இருமடங்காக பெருகியது, கட்டுப்பாடற்ற பொருட்களை அதிகமாக விற்பனை செய்ய நிர்பந்தம் செய்வது, இருப்
பிடத்திலிருந்து பணியிடங்களின் தூரங்களை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை,
வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக தமிழ்நாடு முழுவதிலும் நியாய
விலை கடை விற்பனையாளர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு, உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றிய அளவிலான ரேசன் கடை விற்பனையாளர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, தங்களது கோரிக்
கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கண்டன கோசங்களை எழுப்பி
கண்டன ஆர்ப்
பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும் ,
தீபாவளி பண்டிகை நெருங்கும் வேலையில் ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ரேசன் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்களும், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வரவு செலவுகள் செய்ய மற்றும் உரம் உள்ளிட்ட பொருட்கள் பெற முடியாத நிலை நீடித்து வருகிறது.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply