Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சோழவந்தான்சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகள்…பொதுமக்கள் அச்சம்…

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி 18-வது வார்டு பகுதியான
ஆர் .எம். எஸ். காலனி,
 பத்மா கார்டன் போன்ற பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் சாலையின் நடுவே படுத்துக்
கொண்டு ஓய்வு எடுப்பதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும்
வாகன ஓட்டிகள் அச்
சமடைந்து
ள்ளனர்.
 குறிப்பாக ,
ஆர் .எம் .எஸ். காலனி ,
பத்மா கார்டன்
பகுதிகளில், கால்நடைகள் குறுக்கும் நெறுக்
குமாகவும், சாலையின் நடுவே
படுத்துக் கொண்டும் இருப்பதாகவும் இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும்
  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க
வில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உச்சபட்சமாக சாலை நடுவே இரண்டுக்கும் மேற்பட்ட கால்நடைகள் படுத்து உறங்குவதால், சாலையில் வரும் வாகனங்கள் மற்றும்
வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் இருப்பதாக வேதனையுடன் தெரிவிக்
கின்றனர் . சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக,
 ஆர் .எம் .எஸ். காலனி,
 பத்மா கடன் பகுதிகளில், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும், அதன் உரி
மையாளர்கள் மீது அபராதம் விதித்து விபத்
துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
கேட்டுக்
 கொண்
டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் சாலையில் கால் நடைகள் சுற்றித்திரிந்து விருந்து வழக்கமாக உள்ளது.
மதுரை அண்ணாநகர், கே.கே.நகர்,
புதூர் ,திருப்பாலை, அண்ணாநகர் யாகப்பநகர், தாசில்தார் நகர்,வீரவாஞ்சி தெரு,சித்தி விநாயகர் தெரு, யானைக் குழாய்,  கோமதி புரம், ஜூப்பிலி டவுன் ஆறாவது மெயின் பகுதிகளிலிலும் பசுமாடுகள் வளர்ப்போர், பாலை கறந்து விட்டு,சாலையிலே அலைய விடுவது வழக்கமாக உள்ளது.
இது குறித்து,
மதுரை மாநகராட்சி அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றும் கூட,  சாலையின் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த ஆர்வம் காட்ட வில்லை யாம்.
இதனால், நாளுக்கு நாள் சாலைகளில் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை பெருகி வருகிறதாம்.
ஆகவே, மதுரை மாநகராட்சி ஆணையர், உதவி ஆணை
யாளர்கள், மதுரை நகரில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

– நா.ரவிச்சந்திரன்