மதுரையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில், கலந்த பல நாட்களாக பலத்த மழை பெய்து கால்வாயில் வெள்ளப்
பெருக்கு எடுத்தது. அதிக மழை நீர் கரைபுரண்டு ஓடியது.
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், வாடிப்பட்டி, ஆனையூர், பரவை, திருமங்கலம், மேலூர், கருப்பாயூரணி, வரிசூர்,
கள்ளிக்குடி பகுதியில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது.
தற்போது, மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், சித்தி
விநாயகர் கோவில் தெருவில், பலத்த மழையால் கடந்த 10 நாட்களாக மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. நீரில் இரு சக்கரத்தில் இருவர் தவறி விழுந்து காயம் அடைந்தனர். மேலும், அவ்வழியாக பொதுமக்கள் செல்ல முடியாதபடி ஆங்காங்கே பள்ளங்கள் தோன்றியுள்ளது. அந்தப் பள்ளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால்,
இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல பெரிய இடையூராக உள்ளது.
இதே போல, மதுரை அண்ணா நகர் கோமதிபுரம் மருது பாண்டியர் தெரு, வீரவாஞ்சி தெரு, ஆறாவது மெயின் ரோடு, பகுதிகளிலும் பலத்த மழையால்,
மழை நீர் தேங்கி போக்குவரத்து இடையூறாக உள்ளது.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற ஆர்வம் காட்டவில்லை யாம்.
இதுகுறித்து, மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர், வார்டு கவுன்சிலர்கள் மலைநீர் தேங்கியுள்ள நீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply