எல்லை மீறும் லாட்டரி சீட்டு மாஃபியாக்கள்… கிருஷ்ணகிரியில்தான் இந்த அவலம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தங்கதுரை பொறுப்பேற்றவுடன் லாட்டரி மாஃபியாக்கள், ரேஷன் அரிசி மாப்பியாக்கள் உள்ளிட்டசட்டவிரோத தொழிலில் ஈடுபடுயோர் அனைவரையும் ஒழித்துக் கட்டி, குண்டர் சட்டத்தில் கைது செய்தார். இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுடைய அவருக்கு பெரும் பாராட்டு குவிந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்  புதிதாக பொறுப்பேற்ற கிருஷ்ணகிரி மேற்கு திமுக நகர செயலாளர் அஸ்லாம் ஷெரீப் ஆதரவுடன், புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோயில் லாரி பாடி பில்டிங் பகுதியில் 3 சீட்டு லாட்டரி வியாபாரம் நடத்தி வருபவர் அப்பு என்கின்ற ராம்குமார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது .இவர் திமுகவில் விளையாட்டு மேம்பாட்டுஅணிநகர அமைப்பாளாக உள்ளார்.

 சினிமா தியேட்டரில் ஷோ ஓட்டுவது போல, கிருஷ்ணகிரியிலேயேஆறு ஷோ ஓட்டும் ஒரே நபர் அப்பு என்ற ராம்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நாளொன்றுக்கு 5- லட்சம் முதல்7-லட்சம் வரை மாதத்திற்கு பல கோடி கணக்கில் சட்ட விரோதமாக பணம் ஈட்டும் இந்த கும்பல்,  தவளை தன் வாயால் கெடும் ,
என்ற பழமொழிக்கேற்ப நேற்று முன் தினம் மாலை 7 மணி அளவில் புதுப்பேட்டை பாப்பாரப்பட்டி பகுதியில்  கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ விஜயராணி. இவரது மருமகன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மழைக்காக ஒதுங்கி உள்ளார்.

அப்போது அங்கு நின்ருந்த அப்பு, விக்கி, அருண் ஆகிய மூன்று பேர் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை வம்பு சண்டைக்கு இழுத்துள்ளனர். இதனால் இரு தரப்பினரிடம் அடைய மோதல் உருவான நிலையில் அடி தாங்காமல் கிருஷ்ணமூர்த்தி தனது மாமியார் விஜயராணிக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த வந்த எஸ்.ஐ.
விஜய ராணியையும் லாட்டரி மாஃபியா கும்பல் பிடித்து தள்ளி உள்ளது.

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ விஜய ராணி ஆகியோர் புகார் அளிக்கவே,  கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் விக்ரம்பிரபு வழக்கு பதிவு செய்ய தயங்கி உள்ளார். ஏனென்றால் மூன்று சீட்டு லாட்டரியில்
 மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் தரும் அப்பு மீது எப்படி வழக்கு போடுவது என்று ஜர்க்கடித்துள்ளார்.

 தகவல் அறிந்த கிருஷ்ணகிரி நகர மேற்கு திமுக  செயலாளர் அஸ்லாம்சரிப்,
 அப்புவிற்கு ஐடியா கொடுத்து நெஞ்சுவலி வந்துள்ளதாக கூறி கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் உள்ள மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளார்.

 மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளிடம் அஸ்லாம்சரிப் அப்புவை நெஞ்சுவலி வந்துள்ளதாக கூறி ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு ட்ரீட்மென்ட் தருமாறு கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அப்புவை உடனடியாக டிசாஜ் செய்துள்ளது.

 இந்த நிலையில் அப்பு மீது மது குடித்துவிட்டு இரு தரப்பினரும் சண்டை போட்டதாக கூறி பேரளவிற்கு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ குடும்பத்திற்கு இந்த நிலை என்றால் சராசரி மனிதனுக்கு என்ன பாதுகாப்பு என்று கிருஷ்ணகிரி பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அதிரடி நடவடிக்கை எடுப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கி.கிரி