ஸ்ரீமுஷ்ணம்- 500 ஆண்டு பழமையான அரச மரம்… அடியோடு சாய்ந்தது… உயிர்தப்பிய சிறுவர்கள்…

ஸ்ரீமுஷ்ணத்தில் 500 ஆண்டுகால பழமை வாய்ந்த அரச மரம் நேற்று போயிருந்த மழையில் அடியோடு சாய்ந்தது அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் சப்பிய இரண்டு சிறுவர்கள் லயன்ஸ் கிளப் உதவித்தொகை

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு வன்னியர் தெருவில் சுமார் 500 ஆண்டுகால பழமை வாய்ந்த அரசமரம் வேரோடு சாய்ந்தது இதில் சுப்பிரமணியன் மகன் பாண்டியன் ஓட்டு வீட்டில் விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக அவரது மகன்கள் கீர்த்தி வாசன் ஈஸ்வர் படுகாயங்களுடன் உயர்த்தினர் தகவல் அறிந்த லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் சாலை கனகதரன் மாவட்ட செயலாளர் சாலை செங்கோல் பூவராக மூர்த்தி சோலையப்பன் ஜெயவேல் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அவரது குடும்பத்திற்கு 15000 நிதி உதவி மற்றும் சமைக்கும் பாத்திரங்கள் அனைத்தும் நேரில் சென்று வழங்கினார் இதனை தொடர்ந்து இன்னும் ஓரிரு நாளில் உங்களுக்கு வீடு கட்ட லயன்ஸ் கிளப் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சாலை செங்கோல் அவர்களுக்கு ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது மேலும் இரண்டு சிறுவர்களும் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்