மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் மற்றும் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் வாடிப்பட்டி ஜான்சி மகாலில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, பேரூர் செயலாளர் மு. பால்பாண்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர், மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், ஒன்றியச் செயலாளர்
பால ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். இந்த கூட்டத்தில், பத்திர பதிவு மற்றும் வணிகவரி துறை அமைச்சர் பி மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-சோழவந்தான் தொகுதி என்றுமே தி.மு.க.வின் எக்கு கோட்டை என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
அது சட்டமன்றத் தேர்தல் ஆனாலும் சரி, பாராளுமன்ற தேர்தல் ஆனாலும் சரி அதிக வாக்குகள் பெற்று தருவதில் சாதனை படைத்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட உங்களது உழைப்பால்
அந்த வெற்றி கிடைத்தது. உள்ளபடியே
தமிழக முதல்வர் மக்கள் நலனில் அக்கறை கொண்டு நலத்திட்ட உதவிகள்செயது வருகிறார். அதிலும் குறிப்பாக, மகளிர்க்காக ஏராளமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி நல்லாட்சி நடத்தி வருகிறார். எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறவதற்கான பணியை இப்போது இருந்து உடனே தொடங்கி செய்திட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் பேரூர் அவை தலைவர் திரவியம், பங்களா சி. மூர்த்தி, ராம் மோகன்,வழக்கறிஞர் ராஜாஜி, கவுன்சிலர் ஜெயகாந்தன், அரவிந்தன், ராஜசேகர், கண்ணன்,சக்திவேல்,வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply