Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சீர்காழி நகராட்சியை அலங்கரிக்கப்போகும் பெண்மணி யார்? – ஆராய்ச்சியில் அரசியல் கட்சிகள்

நகராட்சிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வரும் என்ற
எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அதற்காக காத்திருக்காமல் பலரும் களத்தில்
குதித்து தங்கள் பலத்தை காட்ட இப்போதே தயாராகி வருகின்றனர்.இந்நிலையில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி தலைவர் பதவிக்கு இப்போதே
களப்பணியில் சிலர் இறங்கி செயல்பட்டு வருகின்றனர்.சீர்காழி நகராட்சி
தலைவர் பதவி பட்டியலின பெண்ணிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
 இந்நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன.கடந்த சில வருடங்களுக்கு முன்பு
வார்டு வரைமுறை செய்யப்பட்டதால் பல வார்டுகள் பல பகுதிகள் பிரிக்கபட்டு
சில வார்டுகளில் இணைக்கப்பட்டதால் அடுத்த கவுன்சிலர் நான்தான் என்று
செயல்பட்டு வந்தவர்கள் தற்போது கலக்கத்திலும் குழப்பத்திலும்
இருக்கின்றனர்.சீர்காழி நகராட்சி தலைவர் பதவி நேரடியாக தேர்ந்து
எடுக்கப்படாமல் வார்டில் வெற்றிபெற்றவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிலை
இருப்பதால் எது நடந்தாலும் நடக்கட்டும் என்று களப்பணியை தீவிரமாக செய்து
வரும் சிலரின் பெயர்கள் கட்சியினரால் பேசப்பட்டு வருகிறது.
முதலில் ரூலிங் பார்ட்டியான தி.மு.கவில் இரண்டு பெயர்கள் பலமாக
பேசப்பட்டு வருகிறது.மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜே.கே செந்தில்.இவர்
தனது அம்மா கஸ்தூரிபாய் என்பவரை தலைவராக்க முயன்று வருகிறார்.கஸ்தூரிபாய்
மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பாரம்பரிய திமுக.காரர் ஜே.கே.
செந்தில் கட்சியினருடனும் பொறுப்பாளர்களுடனும் நேரடி தொடர்பில் இருந்து
வருவதால் அவரும்; முயன்று வருகிறார்; என்று சொல்கின்றனர்.
 அடுத்ததாக பரவலாக பேசப்படுபவர் நகர இளைஞரணியை சேர்ந்த காண்ட்ராக்டர்
தன்ராஜ்.இவர் தன் மனைவி ரம்யாவுக்காக தீவிரமாக  செயல்பட்டு
வருகிறார்.ரம்யா எம்.இ.பட்டதாரி.தன்ராஜ் குடும்பமும் பாரம்பரிய திமுக வை
சேர்ந்தவர்கள்.தன்ராஜ் அக்கா தமிழ்செல்வி தொடர்ந்து இரண்டு முறை நகராட்சி
கவுன்சிலராக வெற்றி பெற்றவர். தன்ராஜ் அண்ணன் காழி.கலைவாணன்  மாவட்ட
மாணவரணி பொறியாளர் அணி அமைப்பாளராக இருந்து வருகிறார்.மீண்டும் தன்
குடும்ப உறுப்பினர் நகராட்சிக்கு செல்வதற்கான முயற்சியை தன்ராஜ்
மேற்கொண்டு வருகிறார்

அடுத்ததாக அ.தி.மு.க சார்பில் பேசப்படுபவர். வழக்கறிஞர் நெடுஞ்செழியன்.
இவர் மாவட்ட இளைஞரணி இணை செயலாளராகவும் சீர்காழி வழக்கறிஞர் சங்க
செயலாளராகவும் இருந்து வருகிறார்.இவரது மனைவி அஞ்சலிதேவிக்காக தலைவர்
பதவிக்காக தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறார்.அஞ்சலிதேவி நகர கழக இணை
செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிதக்கது.அடுத்தபடியாக
முன்னாள் நகராட்சி தலைவராக இருந்த இறைஎழில் மற்றும் சர்;காழி நகர்மன்ற
உறுப்பினராக இருந்து  இரண்டு முறை மாதிரவேளுர் ஊராட்சி மன்ற தலைவராக
இருந்த மகளிர் அணியை சேர்ந்த ரமாமணி பெயர்களும் பேசப்பட்டு வருகிறது
தேர்தல் தேதி அறிவிக்கபட்ட பிறகு வெற்றி பெற்று முடிசூட போவது யார்
என்பது தெரியும்.

– நடராஜன்