Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பரமத்தி வேலூர்- ஆள் கடத்தல் வழக்கு

பரமத்தி வேலூர்-
ஆள் கடத்தல் வழக்கில்,
திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் உட்பட 4 நபர்கள் கைது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் சார்ந்த விஜயகுமார். இவர் கீரனூர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரம் கணக்கெடுக்கும் பணியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 02.03.25ம் தேதி வேலாயுதம்பாளையம் பகுதியில் தெரிந்த நபரை பார்ப்பதற்காக வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது  நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் நாமக்கல் சாலையில் அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார்.
விஜயகுமார் நாமக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கரூர் மாவட்டம் வேலாயுதபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ( 35)  நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருவதாக கூறப்படுகிறது, இவர் வழக்கறிஞராகவும் உள்ளார்.
மேலும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெருமாள், கரூர் வாங்கல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், வாங்கல் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் வயது 25 ஆகிய நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது
செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் விஜயகுமாரை காரில் கடத்தி நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கந்து வட்டி வசூல் :இளைஞரை கடத்தி கட்டி வைத்து தாக்கிய புகாரில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபாகர் கைது…
காரில் கடத்திச் சென்று நான்கு நாட்களாக வைத்து தர்ம அடி அடித்து சாலையில் தூக்கி வீசிச் சென்ற கொடூரம் :
பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் உயிருக்கு போராடிய நிலையில் தப்பி வந்து கொடுத்த புகாரின் அடிப்படையில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீசார் நடவடிக்கை.

– கௌரிசங்கர்