Save 20% off! Join our newsletter and get 20% off right away!

செஞ்சி – விழுப்புரம் – திருக்கோவிலூர்…அதிமுக வேட்பாளர் யார்? – ஆசைப்படும் செஞ்சி ராமச்சந்திரன்

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதவர் செஞ்சி ராமச்சந்திரன்….. அதிமுக அவரை தவியாய் தவிக்கவிடுகிறது. 1968 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திரா காந்தி தமிழகத்திற்கு வரும் போது கருப்புக்கொடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தவர் செஞ்சியார். அப்போது திமுக ஆட்சி அண்ணா முதல்வர் திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர் செஞ்சியார்  கருணாநிதி அமைச்சர் கையை பிசைந்து கொண்டு போலீசார் கருணாநிதி தெரிவிக்கின்றனர் கருப்பு கொடி காட்ட போகிறவர் திமுக மாணவர் என்று கருணாநிதி அண்ணாவிடம் தொலைபேசியில் தெரிவிக்க அண்ணா மாணவர் பிரதிநிதிகளை அழைத்துப் பேச சொன்னார் கருணாநிதி செஞ்சி ராமச்சந்திரன் அழைத்து பேசினார். முடிவில் மாற்றமில்லை என்று செஞ்சியார் சொல்ல மனு எழுதிக் கொண்டு வர சொல் இந்திரா காந்தியை சந்திக்க வைக்கிறேன் என்று அண்ணா சொல்ல மனுவோடு விமான நிலையம் சென்ற செஞ்சியாரை பிரதமர் இந்திராவிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார் அண்ணா.

ஒசெஞ்சியார் கொடுத்த மனுவை படித்த இந்திரா கண்கள் சிவக்கிறது இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழி என்றால் இனி இந்தியாவில் தமிழ்நாடு இருக்காது என்கிற வார்த்தை கோபப்படுத்தியது இந்திராவை கைநீட்டி விவாதிக்கிறார்கள் செஞ்சியாரும் இந்திரா காந்தியும் விவாதம் முற்றிப்போக சமாதானம் செய்கிறார்த்து அண்ணா. விமானத்தில் ஏறும் வரை செஞ்சி ராமச்சந்திரன் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே சென்றார் இந்திரா. இந்தி தான் ஆட்சி மொழி என்கிற அந்த சட்டம் தற்போது வரை நிலுவையில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் செஞ்சியார்தான்.

1977-இல் முதன் முதலில் அதிமுக போட்டியிடும் போது அதிமுகவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டவர் செஞ்சி தொகுதியில் செஞ்சியார் தமிழகமெங்கும் எம்ஜிஆர் அலை வீச செஞ்சியில் வெற்றி பெற்றார் திமுக சார்பில் செஞ்சி ராமச்சந்திரன். அதுமட்டுமல்ல மூன்று முறை செஞ்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் 78 முதல் 92 வரை தென்னார்க்காடு விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளர். மூன்று முறை வன்னியர்களை எதிர்த்து போட்டியிட்டு மாவட்ட செயலாளரானவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் சந்தித்த மிக முக்கிய அரசியல் தலைவர்களில் செஞ்சி ராமச்சந்திரனும் ஒருவர். அவருடைய சட்டமன்ற அறை 531 இல் இரண்டு மாத காலம் தங்கி இருந்தார் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்.
திமுகவில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவிக்கு பொன்முடி, ஏ ஜி சம்பத் 1992 இல் செஞ்சியாரை எதிர்த்து போட்டியிட முடிவு செய்தபோது இதற்குப் பின்னால் கலைஞர் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு செஞ்சி ராமச்சந்திரன் கலைஞரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்தார் உடனே பொன்முடி சம்பத் ஆகியோர் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெற்று கொண்டனர். 92 விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் செஞ்சியார்.

திமுகவில் இருந்து பிரிந்து வைகோ மதிமுக ஆரம்பித்தவுடன் அந்த கட்சியின் துணை பொது செயலாளராக இரண்டு முறை மத்திய இணைய அமைச்சராக மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து மிகப்பெரிய அரசியல் அனுபவம் கொண்டவர் செஞ்சியார்‌.

ஏதோ சில காரணங்களுக்காக மதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவுக்கு சென்று பின்னர் அங்கிருந்து ஜெயலலிதாவின் அழைப்பின் பேரில் அதிமுகவில் இணைந்தார் செஞ்சியார். அவருக்கு கழக அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்து கௌரவித்தார் ஜெயலலிதா அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி கொடுப்பதில் சில குழப்பம் நீடித்து செஞ்சியார் பெயர் பட்டியலில் இருந்து விடுபட்டு போனது அதற்குப் பிறகு ஜெயலலிதா உயிரிழந்த பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அதே பதவியை அவருக்கு வழங்கி இன்றுவரை தொடர்ந்து நீடித்து வருகிறார் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவரது விருப்பம் யார் காதிலும் சென்று அடையவில்லை சென்றடைந்தாலும் சிரித்தாய்க்கு இல்லை என்றே சொல்லலாம் அதற்கு காரணம் தற்போதைய அதிமுக மாவட்ட செயலாளர் சிவி சண்முகம். சிபி சண்முகத்தின் தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது செஞ்சியார் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் அவரோடு அரசியல் செய்து விட்டு அவரது பிள்ளை சி.வி சண்மகத்தை எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல் சூழ்ச்சி வலையில் சிக்கி தவிக்கிறார் 2026 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் திருக்கோவிலூர் செஞ்சி ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட தயாராகி வருகிறார் இந்த மூன்று தொகுதிகளும் பொன்முடி செஞ்சி மஸ்தான் டாக்டர் லட்சுமணன் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட அதிமுக இதுவரை யாரையும் தயார் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

திமுகவினர் தேர்தலில் என்னென்ன வேலை செய்வார்களோ அதுவெல்லாம் செஞ்சி ராமச்சந்திரன்க்கு தெரியும் வேற என்று சொன்னால் அவரும் திமுகவிலிருந்து வந்தவர்தான் அவர் கற்றுக் கொடுத்து வித்தைகள் தான் அவை எனவே தான் இந்த முறை எப்படியாவது சீட்டு வேண்டும்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் செஞ்சியார். மாவட்ட செயலாளர் சண்முகத்தின் எண்ணம் தூள் தூளாக போவது உறுதி. செஞ்சி ராமச்சந்திரன் களமிறங்க போகிறார் என்றதும் அவருடன் பழகிய முன்னாள் கட்சிக்காரர்கள் ஒவ்வொருவராக அவரை வந்து பார்ப்பதோடு அரசியல் பணிகளையும் தொடங்கி விட்டனர். இந்த விஷயத்தில் எடப்பாடி யார் யார் பேச்சையாவது கேட்டு செஞ்சியாருக்கு சீட்டு மறுத்தால் அதிமுகவுக்கு வட தமிழகத்தில் அது ஒரு சரிவை சந்திக்கக்கூடிய இயக்கமாக மாறிவிடும். மோதிப் பார்க்க தயாராகி விட்டார் செஞ்சியார்..

– பா. ஜோதி நரசிம்மன்