மரக்காணம்-
மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசலை,
வெளி நபர்களுக்கு விற்பனை செய்யும் அதிகாரிகள்…
நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை…
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் அழகன் குப்பம் வசவன்குப்பம் கைப்பணி குப்பம் எக்கியர் குப்பம் மண்டவாய்ப்புது குப்பம் பனிச்சமேடு குப்பம் கீழ் பேட்டை குப்பம் அனுமந்தை குப்பம் நொச்சிக்குப்பம் கூனி மேடு குப்பம் அனிச்சங்குப்பம் உள்பட 19 மீனவர் கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் க்ஷ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் அதிவேக விசைப்படகுகள் உள்ளது. இந்த படகுகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மீனவர்கள் பல்வேறு இயற்கை சீற்றங்களால் மீன்கள் கிடைக்காமல் பல நேரங்களில் வெறும் வலையோடு கரை திரும்புகின்றனர். இதனால் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளுக்கு பயன்படுத்தக்கூடிய டீசலுக்கு கூட பணம் இல்லாமல் நஷ்டம் அடையும் நிலை உள்ளது. இதனால் மீனவர்களின் நலன் கருதி மத்திய மாநில அரசுகள் சார்பில் மீனவர்களுக்கு ஒரு லிட்டருக்கு 16 ரூபாய் குறைவாக மானிய விலையில் டீசல் வழங்குகின்றது. இதுபோல் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கும் டீசல் பங்க் மரக்காணம் அருகே இ சி ஆர் சாலை ஓரம் கைப்பாணியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டீசல் பங்கில் இருந்து தான் விழுப்புரம் மாவட்ட மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மானிய விலையில் டீசல் பெறப்படும் மீனவர்கள் மீன்வளத்துறையில் முறையாக உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இதுபோல் உறுப்பினர்களாக சேர்க்கப்படும் மீனவர்களுக்கு மீன்வளத்துறை சார்பில் டீசல் வழங்குவதற்கான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த மானிய விலைய டீசல் வழங்கப்படும் அடையாள அட்டைகளை டீசல் கடத்தல் தொழிலில் ஈடுபடும் ஒரு சிலர் அரசு அதிகாரிகளின் உதவியுடன் மீனவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு பணம் கொடுத்து வாங்கி விடுகின்றனர். இதுபோல் மீனவர்களிடம் இருந்து வாங்கப்படும் மானிய விலைய அட்டையை பயன்படுத்தி ஒரு வாரத்திற்கு குறைந்தது 50,000 லிட்டர் டீசல்களை சட்டவிரோதமாக மானிய விலை டீசல் பங்கில் இருந்து பல்வேறு வாகனங்களில் அரசு அதிகாரிகளின் உதவியோடு எடுத்துச் சென்று மரக்காணம் வானூர் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகள் தனிநபர் மால்களுக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக மீனவர்கள் குறை கூறுகின்றனர். இதுகுறித்து இப்பகுதியில் உள்ள மீனவர்கள் சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட மீன்வளத் துறையினர் காவல்துறையினர் வருவாய்த் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்வதாக மீனவர்கள் குறை கூறுகின்றனர். எனவே மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசலை மரக்காணம் பகுதியில் சட்டவிரோதமாக கடத்தி செல்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்
– மரக்காணம் தோழர்
Leave a Reply