Save 20% off! Join our newsletter and get 20% off right away!

போச்சம்பள்ளி ஷ¨ கம்பெனி கேள்விக்குறியாகும் பெண்களின் வாழ்க்கை?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த போச்சம்பள்ளி சிப்காட் தொழிற்சாலையில் உள்ள ஷ¨ கம்பெனியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

சிப்காட் பகுதியில் செய்யாறு தலைமை இடமாக கொண்டு செயல்படும் தனியார் ஷ¨ கம்பெனியில் சுமார் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிறுவனத்தில் குறிப்பாக வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் வேலை செய்கின்றனர் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பணியாளர்களைக் கொண்டு நிறுவனம் இயங்க வேண்டும் மாறாக பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் வேலை செய்கின்றனர். மேலும் 2015 ஆம் ஆண்டு இரண்டாயிரம் ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. இதன் நோக்கமே போச்சம்பள்ளி மத்தூர் ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் நக்சல் அமைப்புகளுக்கு செல்வதை தடுக்கவும் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவும் என்ற நோக்கில் இங்கு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது தற்போது பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை துவங்கியுள்ளனர் சிஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் தனியார் ஷ¨ தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர பொறியாளர், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு, பள்ளி படிப்பு வரை விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர். இருப்பினும் போச்சம்பள்ளி, கல்லாவி, ஊத்தங்கரை, மத்தூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு தொழிற்சாலைகள் நிர்வாகம் வேலை கொடுக்கவில்லை. இதுகுறித்து சம்மந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டபோது.., உள்ளூர்காரர்களுக்கு வேலை கொடுத்தால், எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தி தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்துவார்கள் என்கிறார். பெண்களை வைத்து தொழிற்சாலை இயங்குவதால் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இங்கு வேலை செய்யும் பெண்கள் பலருக்கு உடல்ரீதியான தொந்தரவு ஏற்படுகிறது எனவும் திருமணமான பெண்கள் குழந்தை பேறு அடைவதில்லை எனவும், அதிக வெப்பத்தில் வேலை செய்வதால் சில பெண்களுக்கு பைல்ஸ் போன்ற தொந்தரவுகள், நோய்தொற்று ஏற்படுவதாக போச்சம்பள்ளி பகுதி மருத்துவர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான பெண்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தனியார் ஷ¨ தயாரிக்கும் நிறுவனம் செய்யாறு பகுதியில் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த மேலாளர் சூப்பர்வைசர் மற்றும் மெஷின் டெக்னீசியன் போன்றவர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்து பணிபுரிகிறார்கள் இவர்கள் இங்கு வேலை செய்யும் பெண்களை எளிதாக தங்கள் வக்கிர புத்தியால் காம வலையில் சிக்க வைக்கின்றனர் இதனால் நிறுவனத்தில் வேலை செய்யும் பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி, இதுகுறித்து ஷ¨ தயாரிக்கும் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கூறுகையில்.., மேலாளர் சூப்பர்வைசர் மற்றும் அதிகாரிகள் வேலைக்கு வரும் பெண்களை தங்கள் வலையில் சிக்க வைத்துள்ளனர் என்றும் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்டோர் தொழிற்சாலையை விட்டு பறந்து உள்ளனர் என்கிறார்.

கடந்த மாதத்திலிருந்து புதிய விதிமுறைகள் எங்களுக்கு தந்துள்ளனர் காலையில் வேலைக்கு வரும் பெண்கள் கம்பெனி பேருந்தில் வருகின்றனர் ஆனால் வேலை முடிந்து மாலையில் வருவதில்லை எதற்காக என்று கம்பெனி நிர்வாகம் ஆராய்ந்தபோது வேலை முடிந்து மாலையில் நேரத்தில் தன் காதலனுடன் ஒரு சில பெண்கள் இரு சக்கர வாகனத்தில் ஜோடியாக செல்கின்றனர் அதில் ஒரு பெண் காதலனுடன் இரு சக்கர வாகனத்தில் ஜோடியாக செல்ல இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கி உள்ளது அந்த பெண்ணின் கணவர் எப்படி விபத்து ஏற்பட்டது கம்பெனி பேருந்தில் தான் செல்கிறாய் மாலை எப்படி இருசக்கர வாகனத்தில் என்று கேட்க வங்கியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்ததாக மழுப்ப, விஷயம் நிறுவனத்திற்கு தெரியவர தற்போது கம்பெனி பேருந்தில் புதிய விதிமுறைகள் வந்துள்ளது என்று பேருந்து ஓட்டுநர் குமுறுகிறார்.
இதுமட்டுமல்லாமல் திருமணமான பெண்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், திருமணமாகாத இளம்பெண்களும் தங்கள் வாழ்க்கை துணையை அவர்களே தேடிக் கொள்கின்றனர். இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்டோர் கணவர் மனைவி இருவரும் இங்கு வேலைக்கும் வருகின்றனர்.

இந்நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் தங்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக வறுமையின் பிடியில் இருந்து மீள தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைக்கு வருகின்றனர் ஆனால் இங்கு வேலை செய்யும் ஒரு சில கயவர்களால் சில பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து தங்கள் குடும்பத்தை இழந்து தவிக்கின்றனர் இப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை நிறுவனங்கள் பலர் வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றி உள்ளது என்றாலும், ஒரு சிலர் வாழ்க்கை இருளுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.

– பாலாஜி மணி