திண்டிவனம் – நகிரி
ரயில் பாதைக்கு நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு…
சந்தை மதிப்பீட்டின் படி இழப்பீடு?
திண்டிவனம் முதல் நகிரி வரை இரயில் பாதையால் நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு சந்தை மதிப்பீட்டின் படி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த கூடாது என தலைவர்களை இழுத்து சென்று கைது செய்தனர்.
திருவள்ளூர், மார்ச் 26-
திண்டிவனம் முதல் ஆந்திர மாநிலம் நகிரி வரை இரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் ழிபி-5 மற்றும் ழிபி-716ஙி ஆகிய இரண்டு திட்டத்திலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டில் துவங்கி நகிரி வரை 30 கி.மீ. தூரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நிலத்தை இழந்துள்ளனர்.
இந்த விவசாயிகளுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும்.
மரம், செடி, வீடு, கட்டிடம், பைப்லைனிங் ஆகியவற்றிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,
நிலங்களை அளவீடு செய்ய வேண்டும். நிலத்திற்கான ஆவணங்களை சமர்ப்பித்தும் பணம் பட்டுவாடா தாமதம் செய்யாமல் உடனடியாக பணம் வழங்க வேண்டும், நில அளவீடுகளில் உள்ள குழப்பங்களை சீரமைக்க வேண்டும், விவசாயிகளின் பயன்பாட்டிற்கு சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தினர். அதற்காக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர். அதற்காக உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்க வேண்டும் என ஏற்கனவே காவல்துறையினரிடம் அனுமதி வழங்க மனு அளித்தனர்.
பி.டில்லிபாபுவை காவல்துறையினர் இழுத்து சென்று கைது செய்தனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என புதனன்று (மார்ச் 26), காலை ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த கூடாது என காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த கூடாது என ஏதாவது அரசு உத்தரவு இருந்தால் அதன் நகலை கொடுங்கள் என்றார்.
அதுவெல்லாம் முடியாது என ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல், விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.டில்லிபாபுவை, திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணிஸ்டாலின் அராஜகமாக இழுத்து சென்று கைது செய்யப்பட்டார். தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
மேலும் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் உள்ளிட்ட தலைவர்களை தரதரவென இருந்து சென்று கைது செய்தனர்.பெண்களையும் கைது செய்தனர். இதனால் தலைவர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் 40 பெண்கள் உட்பட 160 விவசாயிகளை கைது செய்தனர்.
-கே.ரவிசந்திரன்