இளையான்குடி-அரசு மருத்துவமனையில்…டாக்டர்கள் பற்றாக்குறை…

இளையான்குடி அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போதுமான டாக்டர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர் சுற்றுவட்டார 150 க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்…

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் தவிக்கின்றனர்  மருத்துவமனையில்  டாக்டர்கள் இல்லாத காரணத்தினால் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் மேலும் இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளில் சிக்குபவர்கள் முதல் உதவி சிகிச்சை கூட கிடைக்காமல் சிலர் பலியாகி வருகின்றனர் .

 கர்ப்பிணி பெண்களும் பரிசோதனை மற்றும் பிரசவத்திற்காக இங்கு வருகின்றனர் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற முடியாமல் தவிக்கினர்ணர்  

12 டாக்டர்கலுக்கு இரண்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர்  உரிய டாக்டர்கள் இன்று நோயாளிகளை சிகிச்சை பெற முடியாமல்   சிவகங்கை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதால் வீண்அல்லச்சல் ஏற்படுவதாக புகார் எடுத்துள்ளது மேலும் இங்கு டாக்டர்கள் இல்லாத காரணத்தினால் நர்சுகளை பணி செய்கின்றனர் அவர்கள் போதுமான அளவு மக்களை கவனிப்பதில்லை எதற்கெடுத்தாலும் திமிராக பேசுவது மக்களை அலைக்கழிப்பது என்று உள்ளனர்.

 இதை கண்டு அரசு தேவையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் …

– சு.பகவதி முருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *