உசிலம்பட்டி-மூக்கையாத் தேவருக்கு மணிமண்டபம்முதல்வருக்கு அதிமுக எம்எல்ஏ நன்றி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெங்காமநல்லூரில் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய 16 பேர் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் 105வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அதிமுக 
ஒபிஎஸ் அணி சார்பில் பெருங்காமநல்லூரில் உள்ள நினைவிடத்தில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன்.
நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என, அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உசிலம்பட்டி பொதுமக்கள் சார்பாகவும், பிரமலைக்கள்ளர் சமுதாயத்தின் சார்பிலும், பாப்பாபட்டி பத்து தேவர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
2026 ல் அம்மாவின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றால் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணன் ஒபிஎஸ், அண்ணன் டிடிவி தினகரன், சின்னம்மா சசிக்கலா என நான்கு பேரும் ஒன்று கூடி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கூடி இழுத்தால் தேர் வரும் என்ற பழமொழிக்கு ஏற்ப எல்லோரும் ஒன்று சேர்ந்து 2026 தேர்தலை தேராக நினைத்து இழுத்தால் அதிமுகவின் அம்மா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் உருவாகும் என்கிறார்.

– நா.ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *