மணல் மாபியாவுக்கு பதவி! ஆரணி திமுகவினர் குமுறல்…

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சமீபத்தில் இருபதுபேர் பட்டியல் கொண்ட மணல் மாபியாக்கள் பெயரை வெளியிட்டிருந்தது. அதில் 11வது வரிசையில் இடம் பிடித்திருப்பவர் பாபு இவரை ராஜன்பாபு, தச்சூர் பாபு என்று சொன்னால் ஊர்ல பளிச்சினு தெரியும். எந்த ஊர்ல ஆரணியிலதான்! ஆரணி ஒன்றிய செயலாளராக இருக்கும் துரைமாமதுவின் உபயம்தான் தச்சூர் பாபுவுக்கு மேற்கு ஆரணி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பதவி! திமுகவில் எந்த நிகழ்ச்சி என்றாலும், அல்லது தனக்கு கைஅரிப்பு எடுத்தாலும், தச்சூர் பாபு பெயரை துரைமாமது உச்சரிப்பார் அவ்வளவுதான், தேவையான அளவு பணம் உடனடியாக வந்து சேரும்.
ஆரணி அடுத்த தச்சூர் ஆற்றில் பாபுவை மீறி வேறு யாரும் மணல் அள்ள முடியாது. மாட்டு வண்டிகள் டிராக்டர்கள் லாரிகள் எதுவானாலும் பாபு அனுமதியோடுதான் மணல் அள்ள முடியும் சுருக்கமா புரியற மாதிரி சொல்லனும்னா மொத்த சப்ளைதாரர் பாபுதான்! இதற்கு ஆரணி தாலுக்கா போலீஸ், வருவாய்த்துறையினர் தாராள ஒத்துழைப்பு உண்டு என்கிறார்கள் தச்சூரில்! திமுகவில் ஒரு பதவியில இருந்தால் மணல் வியாபாரத்திற்கு பக்கபலமாக இருக்கும் என்பதால், மேற்கு ஆரணி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பதவி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எவரெஸ்ட் நரேஷ்குமார் ஒப்புதலோடு சாத்தியமாகி இருக்கிறது விஷயம் நடந்து ஒரு மாசமாச்சி… ஆரணி திமுக உடன்பிறப்புகள் மத்தியில் சசலப்புக்கு பஞ்சமில்லை. எங்க கட்சியோட நிலவரத்தை பார்த்தீங்களா..?
ஆத்துல மணல் அள்ளி வியாபாரம் பண்றவருக்கு பாதுகாப்புக்கு ஆளுங்கட்சியில பதவி அதுவும் இளைஞரணியில…, ஒரே நேரத்தில வடக்கு மாவட்ட செயலாளரும் ஆரணி எம்பியுமான தரணிவேந்தன், திருவண்ணாமலை மாவட்ட திமுக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து பார்க்கும் டாக்டர் கம்பன், அமைச்சர் எ.வ.வேலு, மாநில இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வரை அனைவருக்கும் விபூதி அடித்திருக்கிறார்கள்.
தச்சூர் பாபு திமுகவில் இணைந்து அரசியலுக்கு வந்ததே மணல் அள்ளும் தொழில் பாதுகாப்பிற்குதானாம், தன்னுடைய செலவுகளை கவனிக்கவே ஒன்றியம் துரைமாமது தச்சூர் பாபுவுக்கு பதவி வாங்கி கொடுத்திருக்கிறார். திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அலுவலகத்திலிருந்து மணல் மாபியாக்கள் லிஸ்ட் வெளியிட்ட பிறகு இந்த ஏற்பாடா? ஏற்கனவே ஆரணி சட்டமன்ற தொகுதி மீது அமைச்சர் எ.வ.வேலுவிடம் நல்ல பெயர் கிடையாது. இப்ப மணல் மாபியாவுக்கு கட்சியில பதவி கொடுத்து திமுகவை அவமரியாதை செய்திருக்கிறார்கள். இதெல்லாம் ஆளுங்கட்சிக்கு பெருமை சேர்க்காது என்பதை யார் எடுத்துச்சொன்னால் கேட்பார்கள்…?

– வில்வன் வேம்பன் அரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *