தமிழக கவர்னராக இருக்கக்கூடிய ரவி மீது டெல்லி பாஜகவிடவும் அமித்ஷாவிடமும் தமிழக பாஜகவினர் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் பல்கலைக்கழக வேந்தர் நியமன விஷயத்தில் ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது, இந்தத் தீர்ப்பு பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக சறுக்கல் என்கின்றனர் பாஜக மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள். கடந்த மாதம் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்தபோது ஆளுநர் ரவி மீது பல்வேறு புகார்களை தெரிவித்ததாக அதிமுகவினர் தெரிவித்தனர். திமுக கூட்டணிக்கு அரசியல் ரீதியாக சாதகமான விஷயங்களை ரவி செய்வதால் தமிழகத்தில் அது அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிர்காலத்தில் பாதிக்கும் என்கின்ற தகவல்களை எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்தித்தபோது தெரிவித்ததாக பாஜகவில் உள்ள சிலர் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருக்கக்கூடிய அண்ணாமலையை மாற்ற டெல்லி பாஜக தலைமை முடிவு செய்துள்ள நிலையில் தற்போது நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் ரவிக்கு எதிரான தீர்ப்பு வந்ததன் மூலம் இனிய ஆளுநர் ரவியை தமிழக ஆளுநராக தொடர வேண்டாம் என்று மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது. ஆளுநர் ரவி செயலால் நீதிமன்றத்தில் பாஜக மற்றும் மத்திய அரசின் நற்பெயரும் கெடுவதாக பாஜகவினரே தெரிவிக்கின்றனர் இது குறித்து டெல்லியில் இருந்து நமக்கு தகவல் தெரிவித்த சிலர் தமிழக ஆளுநர் ரவி ஏற்கெனவே நாகாலாந்து ஆளுநராக இருக்கும்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ரவி தமிழகத்தில் ஆளுநர் வேலையுடன் சேர்த்து ஆன்மீக ரீதியிலான சர்ச்சை பேச்சுக்கள் குறிப்பாக சனாதனத்தை வளர்க்க வேண்டும் இந்து மதத்தை காக்க வேண்டும் என்கின்ற பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார் சட்டமன்றத்தில் ஆளுநர் தொடர்ந்து அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை படிக்காமல் புறக்கணித்து பிரச்சனைகளை செய்து வந்தார்.
இதனால் ஆளுநர் ரவி மீது தமிழக மக்கள் மத்தியில் தவறான எண்ணம் தோன்றியது. உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்பில் மாநில அரசுக்கு இடையூறாக இல்லாமல் மாநில அரசுக்கு மக்களின் வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ள கருத்தும் ஆளுநர் ரவிக்கு எதிராக இருக்கிறது எனவே நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆளுநர் ரவியின் நடவடிக்கை அடிப்படையிலும் புதிய ஆளுநரை தமிழகத்தில் நியமிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. புதிய ஆளுநர் போட்டியில் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி அவரையும் முன்னாள் கேரளா ஆளுநரும் தற்போதைய பீகார் மாநில ஆளுநராக இருக்கக்கூடிய ஆரிப் முகமது கான் மேலும் முன்னாள் மத்திய உள்துறை செயலாளராக இருந்து தற்போது மணிப்பூர் மாநில ஆளுநராக இருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அஜய் குமாரையும் தமிழக ஆளுநராக நியமிக்க பாஜக தலைமையும் மத்திய அரசும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது.
மீனாட்சி லேகிய பொருத்தமட்டில் பாஜகவின் டெல்லி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் மத்திய இணை அமைச்சராக ஐந்தாண்டு பதவி வைத்தவர், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள மீனாட்சி லேகி தமிழக அரசுடன் இணைந்தும் பாஜகவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தாத வகையில் செயல்படக்கூடியவர் என்கின்ற கருத்து நிலவுகிறது. அதை போல் ஆரிப் முகமது கானை பொருத்தமட்டில் அவரும் மத்திய அமைச்சராக காங்கிரஸில் ராஜீவ் காந்திக்கு கீழும் வி.பி. சிங் உடனும் பணியாற்றியவர். மோடிக்கு மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய ஆரிப் பாஜகவில் முஸ்லிம் முகமாக கருதப்படக் கூடியவர் அவர் கேரளா ஆளுநராகவும் இருந்துள்ளார் தற்போது தமிழக ஆளுநராக அவர் நியமிக்கப்படும் பட்சத்தில் ஆளுநருக்கு எதிராக திமுக செயல்பட்டால் அது முஸ்லிம் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆரிப் முகமது கானை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றனர். எதுவாக இருந்தாலும் நாளை தமிழக வரும் மத்திய உள்துறை அமித்ஷா அவர்கள் முடிவு செய்வார் என்கின்றனர் பாஜகவினர்.
– திலீபன்அய்யனார்